பக்கம்:துன்பச் சுழல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| V

கள்வர் கொண்டனர்

சென்னை நகரம் பலவற்றிற்குப் பேர்போனது. சென்னேச் சிங்காரம் பார்க்கப் பார்க்க இன்பம் பயக்க வல்லது என்று சிங்காரப் பாட்டுகள் கூடப் பலர் பாடுவ துண்டு. சென்னே அழகிய நகரம்தான். கம் காட்டிலே உள்ள எத்தனேயோ ஊர்களைக் காட்டிலும் சென்னே நகரம் மேலானதுதான். என்ருலும் சென்னையில் சேரிகளும் சாக் கடைகளும் குப்பைமேடுகளும் இல்லாமல் இல்லை. சென்னே யைக் காணவருகின்ற பல வெளிநாட்டு மக்களெல்லாம் கூட. அப்படியே காரில் உட்கார்ந்துக்கொண்டே சைபைஜார், தியாகராயநகர், மயிலே, திருவல்லிக்கேணி, பீச்சுரோடு ஆகியவற்றில் சுற்றிவந்துவிட்டு, பல உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்துவிட்டுச் சென்னே சிறந்த ஊர்தான் என்று சொல்லி விட்டுச் செல்வார்கள். ஊர்த் தோற்றம் மட்டுமின்றி, :மக்கள் வாழ்க்கை முறையினையும் அப்படித்தான் கணக் கிடுவார்கள் பலர். என்ருலும் இருபதடி உயரத்துக்கு மூட்டைகளே யேற்றிக்கொண்டு கத்திரியின் கடும் வெய்யிலில், தடுத் தெருவில் வண்டியிழுக்கும் அந்த உழைப்பாளி மட்டும் அவர்கள் கண்ணில் பட்டு விடுவான். ரிக்ஷா இழுத்து வயிறு. வளர்க்கும் அந்த ஏழையும் அங்குத் தென்படுவான். ஆகவே சென்னையின் சிங்காரத்தைச் சித்தரிக்கும் அவர்கள் இந்த வண்டிக்காரர்களைப் பற்றியும் கூருது விடார் என்ருலும் நகரில் கண்டு கேட்டு அறியவேண்டியன பல உள்.

சென்ஃன கரம் சன்மார்க்கர் கிறைந்த ஒரு பேரூர் என்று பேசுவார்கள். இந்து முதலிய நாளிதழ்களில் அன்ரு டம் நடக்கும் நிகழ்ச்சிகளில் வரும் பல சொற்பொழிவு களையும், புராணப் பிரசங்கங்களையும் பிறவற்றையும் கண்டும், எங்கும் கோயில்கள் கிறைந்துள்ளதைக் கண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/42&oldid=580095" இலிருந்து மீள்விக்கப்பட்டது