உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 துன்பச் சுழல்

அவ்வாறு புதிதாகச் சென்னேக்கு வருகின்றவர்கள் பேசிக் கொள்வார்கள். அது ஒரு அளவில் உண்மையென்ருலும் இங்கு வளரும் துன்மார்க்க நெறியோடு சன்மார்க்கம் என்றும் போட்டியிடவே முடியாது. காட்டுப் புறங்களில் சொந்தமாகப் பலவேலி நிலமிருந்தும் பல கோயில்கள் மண் முடிக்கிடப்பது போன்று இங்கு இரா என்பதும், ஆங்காங்கு ஆண்டவனேப்பற்றிய அருள் விளக்கம் காட்டும் பேச்சுக்கள் நிகழும் என்பதும் உண்மைதான். ஆனல் அவற்றிற்கெல்லாம் மேலாக,கெஞ்சம் துணுக்குறும் கொலைகளும், கண்டும் காட்ட முடியாத பெரும் கொள்ளைகளும் இங்கு இல்லாமல் இல்லை. பட்டப்பகலில் பங்களாவில் புகுந்து கொள்ளையிடும் கொடு மையும், போவார் வருவார் பைகளிலிருந்து பணம் மறையும் புதுமையும் நம் சென்னே நகரில் அன்ருட நிக்ழ்ச்சிகள்தாம். இத்தகைய கொள்ளேயும் கொலயும் ஒரு சிலரால் நடப்பன வல்ல. அவற்றிற் கெல்லாம் பயிற்சி அளிக்கச் சிறந்த பள்ளிக் கூடங்கள் உண்டு ; பாடங்கள் உள. அவை யெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் இருப்பன. அதுதான் சென்னையில் தனிச்சிறப்பு. வண்ணு சப்பேட்டைக்கு வடக்கே திருவொற்றி யூரின் ஒரு பகுதி தற்போதுதான் சென்னையோடு சேர்க் துள்ளது. அதில் எங்கு பார்த்தாலும் தென்னஞ் சோலேகள் அழகாக உயர்ந்து வளர்ந்து நல்ல கோடையிலும் குளிர்ந்த காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. ஆனல் இப்போது அக்கக் காட்சியைக் காணமுடியாது. கள்ளுக் கடைகளே எடுத்த பிறகு ஆயிரக்கணக்காகப் பொன்கொழித்த அந்த மரங்கள் பயனற்றன; ரிேரைப்பா ரற்றுப் பெரும்பாலும் உலர்ந்தே விட்டன. சொந்தக்காரர் பலவற்றை வெட்டியும் விட்டார்கள். இது போன்ற சோலைகள் சாலேயின் இரு மருங்குமட்டுமின்றி உள்ளே வெகு தொலைவு வரையில் பரந் திருக்கும் ஒவ்வொரு சோலையிலும் சொந்தக்காரர்கள் தங்கு வதற்காகப் பெரிய பங்களாக்கள் இருக்கும். அவற்றில் ஒன்றி லிருந்து ஒருநாள் திடீரென்று நம் தனியன் வெளியே வருதான. -

ஆம், சீபெரும்பூதுாரிலிருந்து யாருடைய காரிலோ பின்னல் ஒளிந்து ஏறிக்கொண்டு சென்னே நோக்கி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/43&oldid=580096" இலிருந்து மீள்விக்கப்பட்டது