பக்கம்:துன்பச் சுழல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ள்வ்ர் கொண்டனர் 43

தனியன் இங்கு எப்படி வந்தான்? அங்கு உள்ளவர்கள் யார்? அவன் எப்படி இவர்களை அறிமுகம் செய்துகொண்டு அவர்க ளோடு வந்து விட்ட்ான் என்பதை எல்லாம் காண வேண்டு ழல்லவா? யாருடைய காரிலோ எப்ப்டியோ ஒட்டிக்கொண்டு அவன் ச்ென்னேக்கு வந்து கொண்டிருந்தான். கார் சென்னை நகருக்கு உள்ளும் வந்துவிட்டது. எங்கும் விளக்குகள் வரிசையாகக் காட்சியளித்தன. நீல விளக்குகள் பல தெருக் களே அழகுபடுத்திக் கொண்டிருந்தன. தெருவின் இருபுறங் களிலும் வானேங்கிய உயர்ந்த மாளிகைகள் தென்பட்டன. அவற்வை யெல்லாம் முதல் முறையாகக் கண்ட தனியனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவன் இப்புது கரைப் பற்றி யெல்லாம் எண்ணிக் கொண்டே வந்தபோது, கார் ஒரு இடத்தில் திடீரென கின்றது. அவனும் அதுவரையில் உட்கார்ந்திருந்த இன்னல் நீங்கக் கீழே குதித்தான். விடியற் காலை மூன்று மணி. ஆதலால் அவனே யாரும் பார்க்கவே யில்லே. கார் புறப்பட்டுவிட்டது. அவனுக்கு இனி அதைப் பற்றி என்ன கவலை? அங்கேயே சிமிட்டி பூசப்பட்ட நடைப் பாதை மீது அவன் படுத்துக் கொண்டான். இன்னும் பலர் படுத்துக்கொண்டிருந்தனர். சென்னை நகரத்தில் தன்னைப் போன்ற அைைதகள் படுத்து உறங்குவதற்காக அந்த மேடையை அரசாங்கத்தார் கட்டிவைத்தார்களோ என்று: அவன் எண்ணினன். படுத்தவன். அப்படியே உறங்கி விட்டான். அவனுக்குத் தான் தற்போது மூர்மார்க்கெட்டுக்கு எதிரில் இருப்பதாகவும், பக்கத்தே சென்டிரல் புக்ை வண்டி கிலேயம் இருப்பதாகவும் நினைக்க வழி யே து? ஏதேர் சென்னைக்குள் இருக்கிருேம் என்ற அந்த ஒரே உணர்ச்சியில் அப்படியே உறங்கிவிட்டான். .

கால் அவன் கண்விழிக்கும்போது நன்கு விடிக் திருந்தது. தெருவில் ஒடும் டிராம் வண்டிகளையும், பஸ் களையும் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் கின்ருன். எங்கே செல்லவேண்டும், எங்கே இருக்கிருேம், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யெல்லாம் அவனுக்கு ஒன் றுமே தோன்றவில்லை. இப்படி நாள்தோறும் எத்தனையோ பேர் சென்னைக்கு வந்து கொண்டும், ஏதோ கிடைத்ததைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/44&oldid=580097" இலிருந்து மீள்விக்கப்பட்டது