பக்கம்:துன்பச் சுழல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 துன்பச் சுழல்

கொண்டு வயிறு வளர்த்து வாழ்ந்து கொண்டும் தானே இருக்கிருர்கள். ஆம், இதுவும் சென்னே காகரிகத்தின் ஒரு பகுதிதான். நெடுநேரம் கின்று சிந்தித்தான் தனியன். தன், ஆடையெல்லாம் புழுதி படிந்திருந்தது. அருகேயுள்ள தண்ணிர்த் தேக்கத்தில் சென்று முகத்தையெல்லாம் கழுவிக் கொண்டான். பாலத்தைத் தாண்டிச் சென்டிரல் கிலே யத்தை அடைந்தான். அங்கே உள்ளே சென்று அந்தப் பெரிய கட்டிடத்தையும், பிற வேடிக்கைகளையும் அண்ணுந்து பார்த்துக் கொண்டிருந்தான். காலை வேளேயானதால் அங்கே போலீஸ் பாரா அவ்வளவு அதிகமாக இல்லை. அதே மாலேயாக இருந்திருக்குழால்ை இந்த நேரத்துக்குள் அவன் எத்தனையோ முறை போலீசாரால் விரட்டப்பட்டிருப்பான். காலே வேளைகளில், அதுவும் எட்டு மணிக்குள் அவ்வளவு அதிகமாகப் போலீஸ் பாரா இராது என்பது அவனுக்குத் தெரியாது. அந்த நேரத்துக்குள் வெளியூர்களிலேயிருந்து வண்டிகளில் வரும் அரிசி பல வீடுகளில் தஞ்சம் புகும், என்ற இரகசியமும் அவனுக்குத் தெரியாது. அது அரிசிப் பங்கீட்டுக் காலம். அவன் அப்படியே அந்தச் சென் டிரல் கிலேயத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். -

சிறிது கேரம் கழிந்தது. மணி எட்டுக்கு மேலிருக்கும். அப்போதுதான் அவனுக்குப் பசி உண்டாயிற்று. காமம் போட்டுக் கொண்டு முன் நாள் இரவு பெரும்பூதூரில் சாப் பிட்ட சாப்பாடு அவனுக்கு கினேவுக்கு வந்தது. சாப்பாட் டுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணினன். பல வண்டி கள் வந்து நின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இறங்கிச் சென்று கொண்டிருந்தனர். பல சிறுவர்கள் அவர்களது மூட்டை முடிச்சுகளைச் சுமந்து கொண்டு சென்றனர். தர்னும் அவ்வாறு சும்ந்து சென்ருல் ஏதாவது கிடைக்கும் என எண்ணினன். இங்கும் அந்தத் துன்பச் சுழல்' அவனேச் சுற்றிக் கொள்ளும் என்பது அவனுக்குத் தெரி யாது. -

அவன் சிந்தன நெடு நரம் விலக்கவில்ல. ஏறக் குறைய அவன் வயதிருக்கும் ஒரு பையன் மற்ருெருவைேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/45&oldid=580098" இலிருந்து மீள்விக்கப்பட்டது