உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 45

அவனிடம் வந்து வா அண்ணே என்று கூப்பிட்டதும் அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. தனக்குத் தம்பி யேது எனக் கேட்டுக் கொண்டான், தனக்குள்ளே. எங்கேயப்பா? என்ருன். எல்லாம் சொல்லுகிறேன். நீ ஏன் இப்படி கிற்கிருய் அங்கே வா. உடனே உணவு உண்டு. பிறகு எல்லாம் பேசிக் கொள்ளலாம் என்ருன் புதிதாக வந்தவன். தனியனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவனுக்குப் பசி, வேறு. ஆகவே அவைேடு சென்று எப்படியாவது உணவு கொண்டு, பிறகு அவன் மூலமாகவே பிழைக்க வழி தேட லாம் என்று எண்ணிக்கொண்டே வேறுவழியின்றி அவர் களைப் பின் தொடர்ந்தான். மூவரும் இரண்டாம் எண் ணுள்ள பஸ் ஏறி, பிறகு கடந்து மேலே கண்ட திருவொற்றி பூர்த் தென்னஞ்சோலை மாளிகைக்குள் புகுந்தார்கள். - தென்னஞ்சோலை மாளிகைக்குள் புகுந்த தனியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கே மற்றவர்களோடு இவனும் குளித்தான். இவனுக்கு வேறு ஆடை கொடுக்கப் பட்டது. பிறகு உணவு கொண்டார்கள். மணி பத்துக்கு மேல் இருக்கும். அவனுக்கு என்ன செய்வதென்றே விளங்க் வில்லை. இவர்கள் யார்? ஏன் எனக்கு இந்த மாதிரி உணவு, உடை முதலியன தருகிருர்கள்' என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். மற்றவர்களைக் கேட்கவும் அஞ் சின்ை. அந்த வேளையில் ஒரு பருத்த பெரிய மனிதன் அங்கே உள்ளே நுழைந்ததையும், அவன் மற்றவர்களோடு ஏதோ பேசியதையும், தன்னைப்பற்றி விசாரித்துச் சென்ற தையும் அறிந்தான். ஆனால் அது ஒரு கள்ளர் குகையென் றும், அதை முன்னின்று கடத்துபவனே அந்தப் பெரிய மனிதன் என்றும், அங்கே அவனைப் போன்ற சிறுவர் களுக்குத் திருடக் கற்றுக் கொடுக்கிருர்களென்றும், நன்கு அந்தத் திருட்டுக் கலையில் பயிற்சி பெற்றபின் வெளியே திருட அனுப்பிப் பொருள் சம்பாதிக்கிருர்களென்றும், தானும் அதற்காகத்தான் அழைத்துவரப் பட்டவன் என்றும் அவனுக்கு அப்போது தெரியாது. என்ருலும் போகப் போக எல்லாவற்றையும் அறிந்து கொண்டான்.

சென்னேயில் சில தனியிடங்களில் இப்படிச் சிறுவர் களைப் பழக்குகிருர்கள். ஊர் பேரற்று ஓடிவரும் சிறுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/46&oldid=580099" இலிருந்து மீள்விக்கப்பட்டது