பக்கம்:துன்பச் சுழல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 துன்பச் சுழல்

களைச் சில கைதேர்ந்த கள்வர்கள் பிடித்துவந்து நல்லபடி உணவு முதலியன கொடுத்து மெதுவாகத் திருடப் பழக்கு வார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்ற இரவில் கிலேயங்கள், கடைத்தெருக்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஏமாந்த மக்களது பையிலும், கையிலும் வைத்திருக்கும் பணம், பொருள் முதலியவற்றை எப்படிக் கொள்ளை அடிப் பது என்பதைத் தனிமையில் நன்கு பழக்குவார்கள். பழக் கப்பட்ட சிறுவர்கள் பின் தனித்தனியே சென்று தத்தம் சாமார்த்தியத்திற்கும் தைரியத்திற்கும் ஏற்றபடி பொருள் களைக் கொள்ளே அடித்து வருவார்கள். இப்படிப் பழக்கும் இடங்களில் ஒன்றுதான் அந்தத் தென்னஞ்சோல்ல மாளிகை. அங்கே ஐந்தாறு பிள்ளைகள் இருந்தார்கள். அந்தத் தலைவ லுக்கு வயது ஐம்பது இருக்கும். அவன் பெயர் மார்த் தாண்டன எனபது. அவனுககு ஒரு மகன. அவனுககு வயது முப்பது இருக்கும். அவன் பெயர் முருகன். அவனுடன் இருபது வயதுடைய ஒரு பெண் இருந்தாள். அவள் அவனேக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டலும், அவன் மனேவியைப் போன்றே எல்லா உரிமைகளையும் அளித்து உடன் வைத்துக் கொண்டான். அவளுக்கு பெற் ருேர் உண்டோ இல்லையோ தெரியாது. அவளுககுப் பெற் ருேர்கள் என்ன பெயர் வைத்தார்கள்ோ அதுவும் தெரி யாது. என்ருலும் முருகன் அவளே அன்போடு அழைத்த அழகி என்ற பெயரால்தான் அவள் அழைக்கப்பட்டாள். முருகனும் அவன் தந்தையும் அந்தச் சிறுவர்களைத் திருட்டுத் தொழிலில் பழக்குவார்கள். முருகன் அச்சிறுவர்களுடன் கடைத்தெரு முதலிய இடங்களுக்குச் சென்று அவர்கள் திருட்டுச் சாமர்த்தியங்களைக் கண்டு, அவர்கள் கொண்டு. வருவனவற்றைச் சேர்த்து வீட்டுக்கு எடுத்து வருவான். அழகியும் சில சமயங்களில் அவர்களுடன் செல்வதுண்டு. மார்த்தாண்டன் மட்டும், அத்தொழிலக் கற்றுக் கொடுப் ப்ானே தவிர, அவர்களுடன் செல்லமாட்டான். அவன் எப்போதும் பெரிய மனிதர்களோடேதான் பழகுவான். உயர்ந்த உடைதான் அணிந்து கொள்வான். உயர்ந்த மனிதர் களுடன் பழகும் பெரிய கழகங்களில் அவன் உறுப்பினன். அங்கெலாம் அவன் பெயர் மார்த்தாண்டன் அல்ல; வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/47&oldid=580100" இலிருந்து மீள்விக்கப்பட்டது