உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 47

ஏதோ? அவன் ஒரு பெருஞ் செல்வினைப்போல் வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தங்கசாலையில் ஒரு வீடு உண்டு. அதில்தான் அவன் இருப்பான். நாள் தோறும் அந்தத் தென்னஞ் சோலை மாளிக்கைக்கு வந்து கற்றுக் கொடுக்க வேண்டியவற்றைக் கற்றுக் கொடுத்துவிட்டு, வந்தவற்றை எடுத்துக் கொண்டு போய்விடுவான். முருகன் மட்டும் அழகியுடன் அங்கேயே இருந்தான்.

தனியன் சென்ற அந்த நாளிலும் திருட்டு ஒத்திகை நடைபெற்றது. ஆலுைம் அன்றைக்கு அவனுக்கு ஒன்றும் வேலே கிடையாது. அவர்கள் செய்வதை யெல்லாம் பார்த் துக்கொண்டிருந்தான் அவன். முரடன் 'ஜிப்பா போட்டுக் கொண்டு தாழ்வாரத்தில் அப்படியும் இப்படியும் உலாவிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவர்களில் இருவர் அவன் பைகளில் உள்ள கைக்குட்டை முதலியவற்றை அவன் அறி யாத வகையில் எடுக்க முயன்ருர்கள். இடையிடையில் அவன் அவர்கள் எப்படிப் பதுங்க வேண்டும், எப்படி எடுக்க வேண்டும் என்பனவற்றைச் செய்து காட்டியும் சொல்லிக் காட்டியும் விளக்கினன். இவற்றையெல்லாம் கண்ட கனி யனுக்கு அது என்ன என்றே விளங்கவில்லை. பள்ளிக் கூடத்தில் ஏதோ பாடம் சொல்லிக் கொடுப்பதை அவன் கண்டும் கேட்டும் இருக்கிருன். ஆல்ை இந்தப் பாடம் அவனுக்குப் புதிதாக இருந்தது. அந்தப் பாடத்தையும் அதைப் பயிலும் முறையையும் நன்கு தெரிந்துகொள்ள அது அவனுக்கு நெடுநாள் பிடித்தது. அவனுக்கு திருட்டுத் தொழிலுக்கு அடிப்படை என்பது நன்கு விளங்கிற்று. அது விளங்கவே சில நாட்கள் பிடித்தன. அதை அவன் முற்றவும் வெறுத்தான். எங்கேயாவது சென்னேயில் வேலை செய்து அமைதியாக வாழ வேண்டும் என்று வந்த அவனுக்கு இதுபோன்று திருட்டுத் தொழிலில் பழக விருப்பமில்லே, துன்பச் சூழல் அவன் எங்கே சென் ருலும் சுற்றிச் சுற்றிப் பற்றுகிறது என்பதைப் பாவம் அந்த இளம் உள்ளம் எப்படி அறியும் முதலில் அவன் அதைக் கற்றுக் கொள்ள விரும்பாவிட்டாலும், மற்றப் பிள்ளைகளின் வற்புறுத்தலிலுைம், தலைவனது கண்டிப்பான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/48&oldid=580101" இலிருந்து மீள்விக்கப்பட்டது