உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 துன்பச் சுழல்

கட்டளையினலும் ஏதோ அப்படி இப்படி இரண்டொன்று கற்றுக் கொண்டான் என்ருலும் அவன் அதில் நன்கு பழக வில்லை. இப்படியே இரண்டொரு திங்கள் கழிந்தது. இன் னும் அவன் கன்கு திருடப்பயிலாத காரணத்தால் தலைவன் அவனே வெறுத்தான். கன்கு கற்றுக்கொள்ளாவிட்டால் சோறு கிடையாது என்று கண்டிப்பாய்க் கூறி விட்டான். அது மட்டுமின்றி, விரைவிலேயே மற்றவர்களைப் போன்று வெளியே சென்று எப்படியாவது சில நாட்களில் பொருள் களத் திருடிவரவேண்டும் என்றும் கட்டளையிட்டான். தனியனுக்கும் அவன் ஆணையை மேற்கொள்ள வேண்டு வதைத் தவிர வேறு வழியில்லே. சில சமயங்களில் தனக்கு நேர்ந்த கதியைச் சொல்லிச்சொல்லிக் கண்ணிர் விடுவான். ஏதாவது ஒர் இடத்தில் உட்கார்ந்து அழுதுத் தீர்ப்பான். அழகி அடிக்கடி அவனேத் தேற்றுவாள். மற்றவர்கள். தேற்றுவதோடு மட்டுமின்றி, அந்தத் திருட்டுத் தொழில் சிறந்தது என்றே உபதேசம் செய்வார்கள். அவனுடன் நெருங்கிப் பழகிய நண்பர் இருவர் ஒருநாள் அவனேயும் தங்கள் தொழிலுக்கு உடன் அழைத்துச் செல்வதாகவும், அவன் முதல்வேலையை அன்று தொடங்க வேண்டும் என்றும் கூறினர். தலைவனும் மிக முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் அகப்படாது தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் பலவகையாக எச்சரித்து அவனே வெளி யில் அனுப்பினன். சென்டிரல் கிலேயத்திலிருந்து அந்தப் பங்களாவில் உள்ளே புகுந்த தனியன் பல நாட்கள் கழிந்து அன்றுதான் வெளியே வந்தான். அழகி அவனை அழைத்து மிக்க முன்னெச்சரிக்கையாக இருந்து, எப்படியும் தப்பித்துக் கொண்டு வந்து விட வேண்டுமென்று கூறினள். ஏனே. அவளுக்கு அந்தச் சிறுவனிடம் அன்பும் பற்றும் உண்டா விட்டது.

தனியனும் மற்ற இருவரும் புறப்பட்டார்கள். பாவம், வருந்திப் பாடுபட்டு வயிற்றைக் கழுவி அமைதி வாழ்வில் வாழ வந்த தனியனுக்கு இப்புயலும் கொடுமையும் கிறைந்த திருட்டு வாழ்வு கொடுக்கப்பட்டது. தங்கசாலை வந்து பஸ் ஏறிப் பாரிஸ் கார்னர் வந்து இறங்கினர்கள். நன்கு இருட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/49&oldid=580102" இலிருந்து மீள்விக்கப்பட்டது