பக்கம்:துன்பச் சுழல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 49

ஆரம்பித்தது. ஹைக்கோர்ட்டுக்கு எதிராக ஒர் அழகிய புத்தகக்கடை இருந்தது. அந்தக் கடையில் ஒரே கூட்ட மிருந்தது. பல நூல்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தன வென்றும், அவற்றை வாங்கவே பல மக்கள் அங்குக் கூடி யிருந்தார்களென்றும் சிறுவர்கள் அறிந்தார்கள். அந்தக் கடையின்முன் ஏறக்குறைய முப்பத்தைந்து வயது மதிப் பிடக்கூடிய ஒருவர் நீண்ட ஜிப்பா போட்டுக்கொண்டு, மூக்குக் கண்ணுடி அணிந்துகொண்டு கடைக்காரன் பக்கத் தில் நின்றுகொண்டு ஏதேதோ நூல்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். விற்கும் பையன்கள் வந்தவர்க்கெல்லாம் வேண்டிய நூல்களைக்கொடுத்து, பட்டி தயாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அவை எல்லாம் சரிதான என்று கண்டு, பணத்தையும் வாங்கிப் போட்டுக்கொண்டே, அந்தப் பெரிய மனிதரோடு பேசிக்கொண்டிருந்தார் கடைக்காரர். கடையின் மேல் நூல் விற்பனே' என்று ஒளி விளக்கால் பெயர் விளக்கிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் சிறுகச் சிறுகக் குறைய ஆரம்பித்தது. தென்னஞ்சோலை மாளிகையிலிருந்து புறப்பட்டு வந்த அந்தத் திருட்டுப் பையன்கள் மெதுவாக உள்ளே புகுந்தார்கள். அப்படியும் இப்படியும் பார்த்து கின்ருர்கள். நன்ருக உடுத்திக்கொண்டிருந்ததால் அவர்கள் மேல் யாருக்கும் ஐயம் உண்டாகவில்லை. தனியன் மட்டும் பின்னலேயே மெதுவாகச் சென்று கொண்டிருந்தான். அவர்கள் செய்யப் போவதைக் கண்டு கொண்டிருந்தான். சென்ற சிறுவர் இரு வ ரு ம் அந்த ஜிப்பா அணிந்த ப்ெரிய மனிதர் பக்கப்பையில் கையை விட்டு, கைக்குட்டை யையும் வேறு சிலவற்றையும் மெதுவாக எடுத்தார்கள். அதற்குள் யாரோ பார்த்துக் கூச்சலிடவே இருவரும் ஒட்டம் பிடித்தார்கள். எப்படியோ யார் கண்ணிலும் படாமல் அவர்கள் ஒடி மறைந்து விட்டார்கள். தனியன் அவற்றை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒடவே தானும் ஓடவேண்டும் என்று கருதி ஒடத் தொடங்கினன். ஆனலும் அவர்கள் சென்ற வழி முதலியன இவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. மேலும் ஓடுகின்ற இவனைப் பார்த்து இவன்தான் திருடினவன் என்று மற்றவர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். அதற்குள் கூட்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/50&oldid=580103" இலிருந்து மீள்விக்கப்பட்டது