பக்கம்:துன்பச் சுழல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 துன்பச் சுழல்

டம் கூடிவிட்டது. போலீஸ்காரர் இருவர் வந்து சேர்ந்து விட்டனர். அவர்கள் அவனுக்கு இரண்டு அடி கொடுத் தார்கள். அவனே அழைத்துக் கொண்டு பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்ருர்கள். அந்த மாலை வேளையிலே அந்தக் கடைத் தெருவில் மக்கள் கூடி இருந்த கூட்டத் தையும், ஒவ்வொருவரும் தன்னைப் பார்த்து ஏதேதோ பேசிக் கொள்வதையும், ஒன்றுமறியாத தனக்குத் திருட்டுப் பட்டம் வந்ததையும் எண்ணி எண்ணிக் கண்ணிர் விட்டுக்கொண்டே அந்தப் போலீஸ்காரருடன் சைபைஜாரைத் தாண்டிப் பூக்கடைப் போலீஸ் கிலேயத்துக்குள் புகுந்தான். அந்த இடம் அவனுடைய பயத்தை அதிக்மாக்கிற்று. சுவற்றில் கத்திகளும், துப்பாக்கிகளும் மாட்டப்பட்டிருந்தன. அவன் அவற்றை அதற்குமுன் பார்த்திராவிட்டாலும் ஏதோ அவ னுக்கு உள்ளத்தில் பயம் உண்டாயிற்று.

கிலேயத்துக்குள் புகுந்ததும் அழைத்து வந்த போலீஸ் வீரரும், வேறு அங்கு உள்ளே இருந்தவர்களும் ஏதோ ஒரு பெரிய வெற்றியை கண்டவர்களைப்போல அவ்னேப் பலவாறு ஏசினர். அவனே எந்த ஊர் என்றும், என்ன பெயர் என் றும், பெற்ருேர்கள் எங்கே இருக்கிருர்கள் என்றும் எத் தனையோ கேள்விகள் கேட்டார்கள். பாவம், அவன் என்ன சொல்வான்? பெற்ருேர் யார் என்று தெரிந்தால்தானே! ஊர்தான் அவனுக்கு ஏது? ஒன்றும் சொல்லாது கண்ணிர்ப் பெருக்கி, வெம்பி வெம்பி அழுது கொண்டிருந்தான். வர வர அழுகை அதிகமாயிற்று. ஆனல் போலீஸ்காரர்க ளெல்லாம் அவன் ஏமாற்றவே அப்படிச் செய்கிருன் என் றும், அவன் கைதேர்ந்த திருடனயிருக்க வேண்டுமென்றும் பேசிக்கொண்டே அவனேக் கையாலும் கழியாலும் அடிக்கத் தொடங்கினர். பாவம், துன்பச் சுழலில் சிக்கிய தனியன் செய்வதறியாது கதறினன்; சொல்வதறியாது சோம்பின்ை: இந்த கிலேயில் புத்தகக் கடையில் கைக்குட்டையையும், பணத்தையும் பறி கொடுத்த அந்தப் பெரிய மனிதர் செல்வ நாதர் சிலருடன் உள்ளே வந்தார். ஆம், செல்வநாதர் என் பது அவர் பெயர்தான். பையன் அலறுவதைக் கண்ட அவர் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. பையன் முகம் களங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/51&oldid=580104" இலிருந்து மீள்விக்கப்பட்டது