பக்கம்:துன்பச் சுழல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 51

மற்றுக் காட்சியளித்தது. போலீஸ்காரரைச் சற்று விலகச் சொல்லி அவரே அந்தப் பையனே ஏதேதோ கேட்டார். அவ ரையும் அறியாது ஏனே அவனிடத்தில் அவருக்கு அன்பு உண்டாயிற்று. பையன் ஒரு பதிலும் சொல்லவில்லை. இருங் தால் தானே சொல்ல! பெயர் மட்டும் தனியன்' என்ருன்: அவருக்கு ஒன்றுமே புரியவில்லை; அந்தப் பையன் கைக்குட் டையை எடுத்திருக்கமாட்டான் என்று திட்டமாக நம்பினர். அவனுடைய முகத்தின் களங்கமற்ற தன்மை அவர் கம் பிக்கையை உறுதிப்படுத்திற்று. பையனல் பேசவே முடிய வில்லை. அவனே அங்கேயே விட்டுச் சென்ருல் போலீஸ் காரர் அவனைச் சும்மா விடமாட்டார்களென்றும் எப்படியும் அவனுக்கு ஏதர்வது துன்பம் இழைப்பார்களென்றும், கண் டார். அவனும் திரும்பத் திரும்ப அங்கிருக்கும் சிறு சிறைக் கதவின் கம்பிகளையும், கத்தி துப்பாக்கிகளையும் கண்டு கண்டு கதறி அழுதான். எனவே அவர் அவனேத் தன்னுடன் வீட் டுக்கு அழைத்துச் சென்று சில நாள் வைத்திருந்து பிறகு கேட்டால், அவனைப் பற்றிய தகவல் அறிய இயலும் என எண்ணினர். மற்ருெரு புறத்தில் 'சீ! இது என்ன எண் ணம்? நாம் ஏதோ தனிமையில் வாழ்கின்ருேம். இந்தப் பையனை நாம் ஏன் அழைத்துச் செல்லவேண்டும்? வேண்டு மால்ை போலீஸ் கொடுமையிலிருந்து விடுவித்து இரண் டொரு வேளைச் சாப்பாட்டுக்கு ஏதாவது கொடுத்து விட் டால் என்ன? என்ற எண்ணமும் எழுந்தது. பையனே மேலும் மேலும் அழுதுகொண்டே இருந்தான். அதற்குள் வெளியே சென்றிருந்த போலீஸ் இனிஸ்பெக்டரும் வந்தார். அவரும் கடந்ததையெல்லாம் நன்கு கண்டறிந்து, ஆராய்ந்து, பையனது முகப் பொலிவையும் கண்டு அவன் அந்தக் குற்றத் தைச் செய்திருக்கமாட்டான் என்று கூறினர். செல்வநாதர், தான் நினைத்தவாறே இனிஸ்பெக்டரும் எண்ணியது கண்டு மகிழ்ந்தார். மறுபடியும் அவனே வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தூண்டிற்று. ஆனல் அந்த எண்ணத்துக்கு மட்டும், எவ்வளவோ முயன்றும், அவரால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. -

இந்த கிலேயில் அந்தப் புத்தகக் கடைக்காரர் கடையை மூடிக்கொண்டு பையனைப் பற்றி என்ன ஆயிற்று என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/52&oldid=580105" இலிருந்து மீள்விக்கப்பட்டது