உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘52 துன்பச் சுழல்

காண அங்கு வந்துசேர்ந்தார். அவர் வெளிப்புறம் பார்த்துக் கொண்டே செல்வநாதரோடு பேசிக்கொண்டே யிருந்ததால் அவருக்கு கடந்தனவெல்லாம் தெரியும். அந்தத் திருட்டுப் பையன்கள் இருவரும் ஒடிவிட்டதையும், இவன் எங்கேயோ பின்னல் கின்றிருந்து ஓடியதையும் கண்டார். ஆகவே இந்தப் பையனை வீணுகப் போலீசார் தொந்தரவு செய்யா திருக்க வேண்டுமே என்று எண்ணிக்கொண்ட விரைந்து வந்தார். வந்ததும் பையன் செல்வநாதர் பக்கத்தில் நின்று கொண்டு, தேம்பித் தேம்பி அழுவதைக் கண்டார். இரண் டொரு போலிஸ்காரர்கள் அவன்மேல் குறை கூறியதையும் கேட்டார், கடைசியில் தானே கடந்ததைச் சொல்லிவிட வேண்டுமென்று சொல்லியும் விட்டார்.

தன் கடையின் பக்கத்தில் அந்த இரண்டு பையன்கள வந்ததையும், அவர்கள் பையிலிருந்து எதையோ எடுத்து ஓடி யதையும் இவன் தூரத்தே நின்று பார்த்துக் கொண்டிருந்த தையும், அவர்கள் ஓடவே இவனும் ஒடின்ை என்பதையும் கூறி, அந்தத் திருட்டுக்கும் அவனுக்கும் சிறிதும் சம்பந்த மில்லை என்பதை நன்கு எடுத்துக் காட்டினர் அவர். அவனே அடித்த இரண்டொரு போலிஸ்காரருக்கும் கூட ஐயோ பாவம் ஏன் இவனே அடித்தோம் என்ருகிவிட்டது. செல்வநாதர் தாம் நினைத்தது சரிதான் என்றும், அவன் திருடாதவன்தான் என்றும், நல்ல குடும்பத்துப் பையனுக இருக்க வேண்டும், ஏதோ, எப்படியோ இப்படித் திரிகிருன் என்றும் எண்ணி அவனத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்வதென்றே முடிவு செய்துவிட்டார். பிறகு அங்குள்ள வர் யாவரிடத்தும் சொல்லிவிட்டு, பையனேயும் உடன் அழைத்துக் கொண்டு தன் காரிலே அவனேயும் ஏற்றிக் கொண்டு தியாகராய நகரில் தமது மாளிகைக்கு வந்து சேர்ந் தார். வரும் வழியில் சென்னையின் நெடுந் தெருக்களையும், நீல விளக்குகளையும், பிற எழில்களேயும் கண்டுகொண்டே தனியன் வந்தான். என்ருலும் அவன் உள்ளத்தே எங்கே போகிருேம், யாருடன் போகிருேம், ஏன் போகிருேம் என்ற சிந்தனைச் சுழல்கள் சிதறிக் கிடந்தன. அவரும் அவன் வெம்பி வெம்பி வாடியதால் ஒன்றும் கேட்கலாகாது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/53&oldid=580106" இலிருந்து மீள்விக்கப்பட்டது