உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 53;

வாயை மூடிக்கொண்டே வந்தார். மோட்டார் வேகமாக வந்து அவர் மாளிகை வாயிலில் கின்றது. காரிலிருந்து இறங்கி அவனையும்-ஆம்-தனியனையும்அன்போடு உள்ளே அழைத்துச் சென்ருர் செல்வநாதர்.

அந்தப் பெரிய மாளிகையைப் பார்த்து அப்படியே நின் முன் அவன். அடுத்த கணம் காஞ்சிப் பொன்னப்பர் கினேவு. வந்தது அவனுக்கு. அங்குப் பொன்னப்பருடன் அன்போடு: காஞ்சி சென்ருலும், அவர் விட்டில் அம்மையார் தன்னி டம் கடுமையாக நடந்துகொண்டதை எண்ணினன் அவன். இங்கேயும் அதே முறையில் செல்வநாதரின் மனத்தலைவி யார் இருந்து ஏதாவது இன்னல் இழைத்தால் என் செய்வது என்று எண்ணிக்கொண்டே உள்ளே புகுந்தான். செல்வ. காதர் மணம் செய்துகொள்ளாது தனித்த வாழ்வு நடத்து கின்ருர் என்பதும், அவர் ஏதோ சமூகத்தொண்டு செய்து கொண்டிருக்கிருர் என்பதும் அவனுக்கு எப்படித் தெரியப் போகிறது? அவர் உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று வேலைக்காரரிடம் அவனைப் பற்றிக் கூறி, அவனே நல்லபடியே வைத்துக்கொள்ளவேண்டும் என எச்சரித்து வந்தார். புது இடமாக இருக்கிற காரணத்தால் எங்கே யாவது மறுபடியும் அந்தப் பையன் ஓடி விட்டால் என்ன செய்கிறது என்று எண்ணியே முன் ஏற்பாடோடு அவ னுக்கு மனதில் புது இடம் என்ற வேறுபாடு தோன்ருவகை யில் நடந்து கொண்டார். அவனுக்கு இந்த உபசரிப்புகளின் பொருள் ஒன்றும் விளங்கவில்லை. அவரும் கூட அடிக்கடி எண்ணினர். யார் என்று தெரியாத ஒருவனே இப்படி காம் அழைத்துவைத்து ஏன் பாதுக்காக முற்படுகிருேம் என்பது அவருக்கே புரியாத ஒரு புதிராக இருந்தது. எப்படியும் அவனைத் தன் வீட்டை விட்டு அனுப்பக் கூடாது என்று மட்டும் முடிவுசெய்தார். பழகப் பழக அவன் தன்னைப்பற்றிய வரலாறுகளே யெல்லாம் கூ று வான் என்றும்,அப்போது அவன் கிலே அறிந்து அவனுக்கு வேண் டிய வகையில் உதவி செய்யலாம் என்றும் அவர் முடிவு செய்தார். அவர் இதுபோன்று எத்தனையோ அணுதைப் பிள்ளைகளைக் கொண்டுவந்து, ஒரு ஆசிரமம் அமைத்து, அங்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/54&oldid=580107" இலிருந்து மீள்விக்கப்பட்டது