பக்கம்:துன்பச் சுழல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 துன்பச் சுழல்

கேயே அவர்களை வைத்துக் காப்பற்றி வருகிருர், என்ருனும் இவனே அங்கு அனுப்பவில்லை. தன் வீட்டிலேயே வைத்துக் கொள்ள எண்ணினர். வேலைக்காரர்களுக்கு இந்த ஏற்பாடு புதிதாக இருந்தது. *

அன்று இரவு தனியனேத் தன்னுடன் கூடவே இருக்க வைத்துக்கொண்டு உணவு முதலியன கொள்ளச் செய்தார். பிறகு அவனே நடுக் கூடத்தில் (Hall) படுக்கச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, தான் தன் அறைக்குச் சென்று செய்யவேண்டிய வேறு அலுவல்களைக் கவனிக்கத் தொடங் கினர். வேலைக்காரர்கள் தம் தம் வேலைகளை முடித்துப் படுத்துக்கொள்ளத் தம்மைத் தாயார்செய்து கொண்டிருந்தார் கள். கட்டிடத்தின் நடுக் கூடத்திற்கு வந்து தனியன் தனக் கெனப் போடப்பட்டிருந்த படுக்கையில் உட்கார்ந்தான். வீடு முழுவதும் மின்சார விளக்குகள் ஒளியுடன் அழகை யும் பெய்துகொண்டிருந்தன. அந்தப் பெருங் கூடத்தின் இடையில் இரண்டு பேரொளி விளக்குகள் நன்கு எரிந்து கொண்டிருந்தன. அக்கூடத்தை ஒரு முறை சுற்றிப் பார்த் தான். அதன் நடுவில் ஒரு அழகிய பெண்ணின் படம் மாட் டப் பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் ஏனே அவனுக் குத் தன்னேயுமறியாமல் அழுகை உண்டாயிற்று. அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். அது போன்ற படத்தையோ, பெண்ணையோ அவன் அதுவரையில் எங்கும் பார்க்கவில்லையே என்ற எண்ணம்மட்டும் அவனுக்கு இருக் தது. என்ருலும் ஏனே அதைக் கண்டவுடன் அவனுக்கு உள்ளம் ஒருவாறு மாறுபட்டது. காரணம் யாதாயிருக்கலாம் என எண்ணிப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. அந்தப் பெண் யார் என்று அறியவிரும்பின்ை. அவர் வீட்டில் வேறு பெண்கள் யாரும் இல்லை என்பதையும் அறிந்தான். ஒருவேளை அந்தப் படம் அவருடைய மனேவி யின் படமாயிருக்குமோ என எண்ணினன். ஆனலும் அந்தப் படத்திலுள்ள பெண்ணுக்கும் பதினறு அல்லது பதினேழு வயதுதான் இருக்கும்போல் தோன்றிற்று. இவருக்கோ வயது முப்பத்தைந்திருக்கும். ஒருவேளை கலியாணம் ஆனவுடன் எடுத்த படமாயிருக்குமோ என எண்ணினன். அந்த அம்மையார் வீட்டில் இல்லையே; ஒரு வேளை இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/55&oldid=580108" இலிருந்து மீள்விக்கப்பட்டது