உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வர் கொண்டனர் 55

விட்டார்களோ என்று ஐயப்பட்டான். இல்லாவிட்டால் வேறு எங்காவது போயிருப்பார்களோ என்றும் எண்ண மிட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டே அப்படியே உ ற ங்கி விட்டான். அந்தப் புது இடம் அவனுக்கு ஒருபுறத்தில் அச் சத் தை உண்டாக்கினலும், மற்ருெருபுறத்தே

அமைதியையே அளித்தது.

மறுநாள் பொழுது விடிந்தது. செல்வநாதர் வழக்கம் போல எழுந்திருந்து அைைத விடுதியைக் காணப் புறப் பட்டுச் சென்று விட்டார். செல்லுமுன் வேலைக்காரர்களே அழைத்து அந்தப் பையன் உறங்கி எழுந்ததும் அவனுக்கு வேண்டிய வசதிகளே யெல்லாம் செய்துகொடுக்கக் கட்டளை யிட்டார். அவன் அதைப் புது இடம் என்று கருதாதபடி கடந்துகொள்ள வேண்டும் என்று பெரு முயற்சி செய்தார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் தனியன் கண்விழித் தெழுந்தான். ஒரு வேலைக்காரன் வழிகாட்ட அவன் தனது காலைக் கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டான். அவனுக்கென்று புத்தாடைகள் வேறு வைக்கப்பட்டிருந்தன. அவன் நன்கு மூழ்கி அந்த ஆடைகளே உடுத்துக்கொண்டு சிற்றுண்டி கொண்டான். அதற்குள் செல்வநாதரும் வீடு திரும்பினர். அவன் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டு தாமும் மகிழ்ந்தார். அவனிடம் அதிக நேரம் பேசாது ஏதோ இரண்டொன்று மட்டும் கேட்டுவிட்டுத் தொடர்ந்து தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார். எனினும் அந்தப் பையனை நன்கு பார்த்துக்கொள்ளும்படி பணியாளர் களுக்கு மறுபடியும் எச்சரிக்கை செய்தார்.

தனியன் அங்கே ஒரு செல்வர் வீட்டுப் பிள்ளேயென வளர்ந்து வந்தான். அங்கே அவன் இன்ப வாழ்வில் திளேக் கப் பல நாட்கள் உருண்டோடின. அவன் படிப்பதற்கு நல்ல கதைப் புத்தகங்களும் பிறவும் அவர் அவ்வப்போது வாங்கி வருவார். இரண்டொரு முறை தனது அைைத விடுதிக்கும் அவனே அழைத்துச் சென்றிருக்கிருர். இன்னல் இன்னதென அறியா வகையிலே அவன் வாழ்வு கழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/56&oldid=580109" இலிருந்து மீள்விக்கப்பட்டது