உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 துன்பச் சுழல்

கொண்டிருந்தது. துன்பச் சுழலிலிருந்து தான் மீண்டு விட்டதாகவே அவன் கினைத்தான். என்ருலும் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்க்கும்பொழுது ம ட் டு ம் அவனுக்கு ஏதோ தோன்றுவது போன்றிருந்தது. அப் பெண்ணேப் பற்றி யாரென அறியப் பணியாளர் எல்லோரை யும் கேட்டுப் பார்த்துவிட்டான். அதைப் பற்றிய தகவல் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும், அவர் கலியான மாகாதவர்தான் என்றும், எனவே அது அவர் மனைவியின் படமாக இருக்க முடியா தென்றும் கூறினர். என்ருலும் அவனுக்கு மேலும் அப்படத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசை உண்டாயிற்று. அவரையே கே ரா கக் கேட்டு விடலாமா என்று கூட எண்ணினன். என்ருலும் அஞ்சி அஞ்சி அவ்வாறு கேட்கவில்லை. நாட்கள் ஒன்றின்பின் ஒன்ருக ஒடிக்கொண்டே இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/57&oldid=580110" இலிருந்து மீள்விக்கப்பட்டது