உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தென்மொழி


சொற்கள் மறைத்தே போய்விட்டன. அதற்குமேலே என்னவென்றால் இலக்கிய வழக்கிலும் அவை முழுவதும் அழிந்துவிட்டன என்று நான் சொல்லுகிறேன். ஏனென்றால் ஆரியம் தென்னாட்டுக்கு வரும் முன்னே ஆரியச் சார்பான பார்ப்பனர்தாம் தென்னுட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு முன்னாலே ஆரியம் ஆல்லது சமற்கிருதம் வருமுன்னாலே இந்தத் தமிழ் நூல்கள் அனைத்தும் அழித்துவிட்டன. அதை நீங்கள் அறியவேண்டும். இக்கால் தலைக்கழக நூல் ஒன்றும் இல்லை; இரண்டாம் கழகத் தினதும் ஒன்றுமில்லை. மூன்றாம் கழகத்தின் நூல்கள் உள்ளன. இம் மூன்று கழகங்களினுடைய நூல்கள் காலத்தினால் மட்டுமன்றித் தன்மையாலும் பண்பாலும் கூடத் தலை, இடை, கடைப்பட்டவை. ஏனென்றால் இந்தத் தலைக் கழகக் காலத்திலே தமிழ் முத்தமிழாயிருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு இலக்கண நூலும் மாபிண்டம் என்ற சொல்கின்ற முத்தமிழ் நூலாக இருந்தது. ஒவ்வொரு புலவனும் முத்தமிழ்ப் புலவனாக இருந்தான். வரவரத்தான் இடைக்காலத்திலே இறுதிக் கழகக் காலத்திலே முத்தமிழ் வேறு பிரிந்தது பொருளிலக்கணம் பிற்காலத்தில் நன்னூலார் காலத்தில் விலக்கப்பட்டது. மாணவர்க்கு இப்போது இலக்கணமே வேண்டாம் என்ற முறையிலே வந்துவிட்டது. இன்னும் சற்று முன்பு மொழியிலே செய்யுள் கற்பிக்கும்போழுது அத்துடன் சேர்த்தே இலக்கணம் கற்பிக்கலாம் என்று வந்தது. இப்பொழுது இலக்கணமே வேண்டாம்; இலக்கியமே போதும்; அதிலே வாங்கிய மதிப்பெண்ணாலேயே ஒருவன் தேறிவிடலாம் என்ற கொள்கை இருந்து வருகிறது. இப்படிக் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாய், கட்டெறும்பு தேய்ந்து சிற்றெறும்பாய் அதுவுந் தேய்ந்து ஒன்றுமில்லாது போனது' என்கிற பழமொழிப்படி இப்பொழுது வந்திருக்கிறது.
தொல்காப்பியம் ஒரு பழமையான நூல்தான்; இருந்தாலும் அஃது ஆரியம் வந்த பிறகு ஏற்பட்ட நூல். அதிலே வடசொல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரியரைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ் நூல் அனைத்தும் அழிந்தன; அழிக்கப்பட்டுவிட்டன; அதை அறிய வேண்டும். ஏனென்றால் சமற்கிருதத்திலிருந்து ஓர் உயர்வு வேண்டும் என்ற ஒரு முயற்சி நடந்தது. அந்த முயற்சி பல்யாகசாலை முது குடுமி என்ற ஒரு மன்னன் வேள்வியிலே ஈடுபட்டபின் வெற்றி பெற்றது.
இந்தத் தமிழ் அழிந்து சிதைந்து கிடக்கிற, இந்தக்காலத்தில் கூட இருந்த சொற்களைக் கொண்டு எத்தனையோ வேறு சொற்களை நாம் ஆக்கிக் கொள்ள முடியும். அந்தத் தகுதி தமிழுக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சிலர் உள்ளனர். சிலர் என்றால் புறம்பானவர்களைப் பற்றி நான் சொல்லவில்லை, அஃது அவர்களுக்கு இயல்பானது. சிலர் காட்டிக்கொடுப்பதி