பக்கம்:தெப்போ-76.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தெப்போ - 76 பூஜை செய்ய வேண்டாமா? பிள்களயார் பிடிக்க மஞ்சள் பொடி வேண்டுமே!’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரிகள். காலேயிலே வைத்தாவை வரச் சொல்லுவதுதானே? நாளேக்கே இங்கு சமையலே ஆரம்பிச்சுடலாமே!’’ என்ருர் கோபால் ராவ். சொல்லாமல் இருப்போமா! ராத்திரியே கார் அனுப் பிக் கூட்டி வந்துவிட வேண்டியதுதான். ரெடியா இருக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிருேம்?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. ‘அப்பம், எள்ளுருண்டை, வடை, சுண்டல், வெண் பொங்கல் இவ்வளவும் செய்யச் சொல்லியிருக்கேன். பிள்ளே யாருக்கு நைவேத்தியம்?’ என்ருர் சாம்பசிவ சாஸ்திரி.

  • அப்படியே கொஞ்சம் கொழுக்கட்டையும் செய்யச் சொல்லுங்க. பிள்ளையாருக்கு ரொம்பப் பிடிக்கும்?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. -
பிள்ளையாருக்கா, உமக்கா??? என்று கேட்டார் அம்மாஞ்சி.

'பூஜைக்கு சக்கரவர்த்தியும் மகாராணியும் தங்கள் குடும்பத்தாருடன் வருவதாகச் சொல்லியிருக்கிருர்கள்’’ என்ருன் பஞ்சு. ‘'தேங்காய், சந்தனம், புஷ்பம், ஊதுவத்தி, சாம்பி ராணி, வெற்றிலே பாக்கு சகலமும் வந்திருக்கு மெட்ராஸ் லேருந்து...?? என்ருர் ஜப்பான் சாஸ்திரி. "மாலே வந்திருக்கா? என்று கேட்டார் அம்மாஞ்சி. 'பத்து ரோஜா மாலேயும், ஒரு டஜன் மல்லிகைப் பூ மாலேயும் ஸ்பெஷலாகக் கட்டி அனுப்பியிருக்கிறர்கள்?? என்ருர் சாம்பசிவ சாஸ்திரி. பிள்ளையார் பூஜை முடிந்ததும் சக்கரவர்த்தி குடும் பத்தாருக்கு அந்த மாலே களேப் போடணும்?’ என்ருர் கோபால் ராவ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/101&oldid=924601" இலிருந்து மீள்விக்கப்பட்டது