பக்கம்:தெப்போ-76.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 'பிரயாணம் செய்தால் ஜப்பான் ரயிலில் செய்யனும். ப்ளேனில் போனல் கூட இவ்வளவு வசதியா இருக்காது. துளி அலுப்பு இல்லேயே! என்ருர் அம்மாஞ்சி. ஜன்னல் ஒரமாக உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவ சாஸ்திரி, ஒரு இஞ்ச் நிலத் தைக் கூட விணுக்காமல் , எங்கே பார்த்தாலும் பயிர் பண்ணியிருக்கான் ஜப்பான்காரன். கண்ணுக்கு எட்டின வரைக்கும் ஒரே நெல் வயலா இருக்கு...?? என்ருர். ஜப்பான் பூமியை முக்கால் பங்குக்கு மேல் மலேகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அந்த மலேகளுக் கெல்லாம் ராஜா ஃப்யூஜி’’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

  • ரொம்பச் சின்ன தேசம். இதிலே எங்கே பார்த்தா, லும் மலே. மிச்சம் இருக்கிற துளியுண்டு இடத்திலே குடி யிருக்க வீடு, கார் போக ரோடு, ரயில்வே லேன்கள், தொழிற்சாலைகள், கோயில்கள் இவை தவிர ஆறு, காடு மேடு இதெல்லாம் வேறே. இவ்வளவும் போகப் பயிர் பண் றதுக்கு இடம் ஏது?’ என்று வியந்தார் அம்மாஞ்சி.
  • இதிலே வேடிக்கை என்ன தெரியுமோ ஜப்பான்லே எப்பவுமே அரிசிக்குப் பஞ்சம் கிடையாது. தி ஜாப்னிஸ் பீபிள் வில் நெவர் ஸ்டார்வ்’னு என் மருமான் எனக் கொரு சமயம் லெட்டர் எழுதியிருந்தான்’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி. -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/82&oldid=924739" இலிருந்து மீள்விக்கப்பட்டது