பக்கம்:தேன்மழை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டுக்குச் சேலை தந்தாள் முல்லைக்கு முறுவல் தந்தாள் முகிலுக்குக் கூந்தல் தந்தாள் வில்லுக்குப் புருவம் தந்தாள் வேலுக்கு விழிகள் தந்தாள் சொல்லுக்குச் செந்தேன் தந்தாள் சுனைநீர்க்குக் குளிர்ச்சி தந்தாள் அல்லிக்குச் செவ்வாய் தந்தாள் அழகுக்கே அழகு தந்தாள் ! நடைதந்தாள் அன்னத் திற்கு நகைதந்தாள் எனக்கு நன்னூல் இடைதந்தாள் கொடிக்கு நல்யாழ் இசைதந்தாள் எனக்கு தக்க விடைதந்தாள் பிறர்க்கு மையல் விழிதந்தாள் எனக்கு மேலும் மடல்தந்தாள் படிப்ப தற்கு மலர்தந்தாள் நுகர்வ தற்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/148&oldid=926729" இலிருந்து மீள்விக்கப்பட்டது