உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படிக்கு சந்தனப் பொதிகை என்றன் தாய்வீடு; தனித்தி யங்கும் செந்தமிழ் போன்றே யானும் சிறந்தவள்; அந்தி மாலை வந்தபின் வருவேன் சோலை வரவேற்கும்! இப்ப டிக்கே அந்தியில் வந்து லாவும் 'அசைவளி' என்னும் தென்றல். வள்ளுவர் பரணர் ஒளவை மற்றவர்க் குதவி செய்தேன்; அள்ளினும் குறையேன், கள்வர் அதட்டினும் அஞ்ச மாட்டேன்; பள்ளியில் இருப்பேன் வந்தால் பார்க்கலாம் என்னை; ஏற்றுக் கொள்ளுவீர் இப்ப டிக்குக் குவலயம் போற்றும் கல்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/260&oldid=926841" இலிருந்து மீள்விக்கப்பட்டது