உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் ነኝ எவ்வாறும் தன்னிச்சைக் கீடாக்கிக் கொள்வதென ஒவ்வா. நினைப்போ டொருநாள் தொடர்ந்தானே! வீதிப் பெயரும்அவள் வீட்டின் இலக்கமுமே ஏகித் தெரிந்துவந் தின்னெருநாள் தன்னெத்த தோழர் குழாங்கூட்டித் தோன்று நினைப்புரைத்தான் ஆழப் பதிந்துவிட்ட ஆசை தனையுரைத்தான்! ஆணழகன் உன்னை அவள்மதிக்க வில்லையெனில் கோணல் அறிவன்ருே கொள்கை சரியில்லை! கட்டாயம் பாடம் நடத்திந் காட்டிடுவாய் விட்டாயோ உன்னை வெறுங்கோழை யென்றிடுவோம் என்ருெருவன் சொல்லித்தி யெண்ணத்தை மூட்டிவிட்டான் இன்றே அவளைநீ எய்து தற்குத் தக்கவழி சொல்வேன் அதனைச் சுறுசுறுப்பாய்க் கைக்கொண்டு வெல்வாய் என ஒருவன் வேறுவழி கூறிநின்ருன். 'இன்னுன் இனியன் எனவறிய வேண்டுமெனில் அன்னன் உடன்பழகும் அன்பர்களைக் கண்டறிக’ இந்தப் புலவர்மொழி என்றென்றும் உண்மையென அந்தத் திருக்கூட்டம் அப்படியே சான்ருகும். வெறிநாய் போல் வீணன் ஆசைவெறிப் பார்வையுடன் ஆடவர்கள் பார்த்தாலும் மாசுமரு வற்ற மனங்கொண்ட பூவையர்கள் பேசிச் சிரிப்பதில்லை; நெஞ்சம் பிடிக்காதேல் கூசி யொதுங்கிடுவார்; கொஞ்ச இடங்கொடார் நோக்கம் இலையென்று நோக்கும் விழிமொழியே யார்க்கும் உரைத்துவிடும்; அத்தை யுணராமல் 2