பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - நாச்சியப்பன் பின்தொடர்ந்து பின்தொடர்ந்து பேதையரைத் - துன்புறுத்தும் வன்மனத்துப் பேயர்களால் வாடும் திருநாடே! - கண்ணில் அனல்காட்டிக் கண்டிப்பாய்ச் சென்றவளை எண்ணித்தான் பின்தொடர்தல் ஏற்ற வழியன்றென்(று) உன்னமல் கண்ணப்பன் உன்ம வெறிபிடித்த செந்நாய்போல் நாளும் தொடர்ந்து திரிந்தான்! பயிலும் சுருக்கெழுத்துப் பள்ளிமுடிந் தோர் நாள் மயிலாள் வெளிநடந்தாள்;மாணற்ருன் பின்தொடர்ந்தான். வஞ்சகன் வழிமறித்தான் சாலை திரும்பியொரு சந்தின் வழிநடந்தால் கோல வடிவாள் குடியிருக்கும் வீடுவரும். அச்சந்தில் பாதி அவள் கடந்து சென்றதன்பின் உச்சந் தலையாட ஓடிவந்தான் கண்ணப்பன் நில்லென்று கூறி நிறுத்தினன்; இப்போது சொல்லென்று மீறித் துடிப்போடு கையைப் பிடித்தான்; உருவினுள்; கன்னத் தறைந்தாள்; தடுத்தான் வழியைத் தழைக்காட்டுப் பைங்கிளியைக் கொத்தப் பறக்கும் கொடும்பருந்தைப் போலங்கே சித்தப் பிரமையுடன் சேயிழையைப் பற்றவந்தான். "ஐயையோ! பாவி அறிவில்லை போ?'வென்று - மெய்துடிக்க வாய்துடிக்க மேலும் அவள் ஓலமிட்டாள். ஆளில்லாச் சந்தில் அவள்மானத் தையன்றே பாழாக்கித் தீர்த்துப் பலிகொள்வ தென்றே வெறிகொண்டு பாய்ந்தான்; விளையாடும் மானைக் குறிகொண்டு தாக்கும் கொடும்புலியை யொத்திருந்தான்.