உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் i9 பண்பில்லா மாக்கள் பயிலும் ஒருநாட்டில் பெண்கள் துணையின்றிச் செல்லல் பிழையென்றே அப்போது தானுணர்ந்தாள்; ஆபத்து வந்தபின்னே தப்பை நினைத்தறிந்தால் தாளுய் விலகுமோ? இப்போது நானென்ன செய்வேன் எனக்கலங்கி அப்பேதை தீப்புழுவாய் அங்கே துடித்திருந்தாள். ஏக்கத் துடன்பார்த்த என்னை அலட்சியமாய்ப் பார்க்கத் துணிந்தவளே, பார் இப்போ தென்செயலை! கொள்ளிக்கண் காட்டிஎனக் கொன்றுகொன்று வந்தாயே கள்ளிநீ இப்போதென் கைப்பிடியில் சிக்கிவிட்டாய் தப்பமுடி யாதென்று தாவியவள் மேற்பாய்ந்தான் அப்போது கல்லொன் றவன்தலையில் மோதியதே! என்னவென்று பார்த்தான் எதிரில் உருண்டுவரும் சின்ன மலைபோலே சீறிவந்தான் ஒர்மனிதன். பெண்ணே வழிமறிக்கும் பேடிப் பயலே உன் கண்ணைப் பறிக்கின்றேன்; கையை ஒடிக்கின்றேன்; எண்ணிப்பார் உன்னெலும்பை!” என்றுமிகக் கொக்கரித்துக் திண்ணென்று மோதித் திடுமென்று வந்தவனும் கண்ணப்பன் ஒடோடக் கைவரிசை காட்டிநின்ருன் உண்ணப்போம் மானம் உடன்காக்கத் தான்தொழுத தெய்வமே அன்னவனைத் தேடி யனுப்பிற்றென்(று) ஐயமின்றி நெஞ்சில் அதனைத் தொழுதிருந்தாள். ' என்றுங் கலையா எழிற்சித் திரமனையாள் நன்றியுடன் வாழ்த்தி நடுச்சந்தில் நின்றிருந்தாள். பேயை விரட்டிவிட்டுப் பின்திரும்பி வந்தவனைத் தூய மனத்தாள் தொழுது நன்றி கூறிநின்ருள். கூட வருவேன்நான் கொஞ்சமும்நீ அஞ்சாதே வீடுவரை வந்துன்னை விட்டுவிட்டுப் போய் வருவேன்