உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாச்சியப்பன் என்றந்த ஆடவனும் ஏந்திழையாள் அச்சத்தைக் கொன்று நடைபோட்டான்; கோதை மகிழ்ச்சிகொண்டாள். வந்தவன் மாமன் மகனே வீட்டுக் கதவைத் திறந்து வெளிப்போந்த வாட்டடங் கண்ணுளின் அன்னை மகிழ்ச்சியுடன் 'கோதை,யுன் அத்தானை எங்கிருந்து கூட்டிவந்தாய்? ஒ’ தென்று கேட்டாள் உவகையுடன் அப்பெண்ணும் "அத்தான நானறியேன் அம்மா என் மானத்தை இத்தரையில் இந்நாளில் காத்தவரும் என்னத்தான்” என்று நடந்ததெலாம் இன்பமுடன் கோத்துரைந்தாள் 'நன்றுநன்றென் மாமன் மகளையே நான்காத்தேன்; மாமாவின் வீடுதனைத் தேடிவரும் போதினிலே கோமாளி கைப்பட்ட குண்டுமல்லிப் பூமாலை போலே யகப்பட்ட பூங்கொடியின் மானத்தை நாலே அடிகளினல் நான்காத்துக் கொண்டுவரத் தக்க சமயத்தில் தான்வந்தேன் என்றுசொல்லிப் பக்க மிருந்துதன் மாமிக்குப் பெற்ருேர் நலங்கூறிச் செய்கழனி நாற்று நிலையும் பலப்பலவாஞ் சிற்றுார்ப் பருவநிலை யத்தனையும் கோத்துரைத்துச் சின்னுட்கள் கூடி விருந்துண்டு பேர்த்துஞ்சிற்றுார்க்கே பிரிந்து புறப்பட்டான். பெற்றெடுத்த செல்விதன் மானம் பெயராமல் மற்றந்த நாட்டுப் புறமகனும் காப்பாற்றி ஒப்படைத்துச் சென்றபின்னே உட்கார்ந்து பெற்றவர்கள் தப்பின்றித் தப்பித்த தம்மகளின் வாழ்க்கைதனைச்