பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 21 சீராக்க வேண்டுமெனத் திட்டமிட்டார்; வாழ்க்கையெனும் போராட்ட வையத்தில் பூங்கொடியர் எத்தனைதான் கற்று மனவுறுதி காட்டிநின்ற போதினிலும் உற்ற துணையாய் ஒருவன்தோள் சேர்ந்தால்தான் அச்சமின்றி வாழ்ந்திடலாம் என்னும் அருங்கருத்தை நிச்சயமாய்க் கண்டு நெடுநாட்கள் சிந்தித்தார். ஆயிரங் காலத்துப் பயிர் பள்ளி யிறுதி படித்துவிட்டாள்; தட்டெழுத்தும் மெள்ள முடித்துவிட்டாள் மேலும் சுருக்கெழுத்தில் தேறிவிட்டால் போதும் திருமணந்தான் செய்திடலாம் ஊரிலுள்ள மாமன் மகனும் உயர்குணந்தான் ஆனாலும் கல்வி அதிகமில்லை ஆதலினல் தேனை கோதை திருமாலை சூட்டுதற்குத் தக்கமாப் பிள்ளை தனைத் தேடிச் செய்வதுதான் ஒக்கும் என்றே உறுதிசெய்து கொண்டார்கள். எங்கெங்கோ தேடி யலைந்தார்கள் யாராரோ அங்கென்றும் இங்கென்றும் ஆடி அலையவிட்டார். ஆயிரமாங் காலம் அழியாமல் ஓங்குதற்குத் தூயதாய் ஊன்றும் குறிக்கோட் பயிரென்றே ஆய்ந்தாய்ந்து தேடி அழகுங் கலைப்படிப்பும் வாய்ந்தமாப் பிள்ளையினைத்தேர்ந்துறுதி செய்துகொண்டார் சாத்திரங் கூறும் பொருத்தம் சரிப்படவும் கோத்திரத் தோடு குலமும் பொருந்தவும் ஏற்றமாப் பிள்ளை இவனெனத் தேர்ந்துதம் கோற்ருெடி மங்கையாள் கோதை திருமணத்தைப்