உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நாச்சியப்பன் பஞ்சாங்க வேதியர் பார்த்துக் குறித்ததாம் மஞ்சள் தடவிய பத்திரிக் கையில் குறித்தபடியே முருகப்பெருமான் திருவரு ளாலே நிகழும் பரிதாபி ஆவணித் திங்கள் பதினேராம் நாளெனும் ஞாயிறு தன்னிலே நல்லுத் திரட்டாதி நட்சத் திரமொடு சித்தயோ கஞ்சேர் சுபயோக மிக்க சுபதினந் தன்னில் மதவேள் வலியும் மதியும் பொருந்தும் உதயாதி நாழிகை மூன்று முதலாக மூன்றரைக் குள்ளாக கன்யா இலக்கினத்தில் ஆன்ற பெரியோர் அருளிய வண்ணம் திருவளர் செல்வியாம் கோதை தனக்கும் திருவளர் செல்வனும் மாதவ னுக்கும் திருமண மென்ருேர் அழைப்பு விடுத்தார் திருமணச் செய்தி திகழும் அழைப்பினை மாதவன் நண்பனும் கண்ணப்ப னுக்குமிக ஆதர வோடே அனுப்பினன். கண்ணப்பன் கோதை திருமணம் கூறும் அழைப்பினை வேதனை யோடு விரித்துப் படித்தவுடன் நெஞ்சிற் பொருமை நெருப்புப் புகைந்ததுகாண்! வஞ்சிக் கொடியாளின் வாழ்வைக் கெடுப்பதுதான் எஞ்சி யிருக்கும் இலட்சியமென் றே நினைத்து - மஞ்சம்விட் டோடியொரு மைப்பேனு தானெடுத்துத் தன்நெஞ்சத் துள்ளே தழைத்ததொரு வஞ்சத்தைப் புன்னெறியாஞ் சூழ்ச்சிப் பொருளாய் வடித்தெடுத்துத்