உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 23 தாளில் சிலவரிகள் தானெழுதி மன்றலுறு நாளில் மணமகனை நாடிக் கொடுத்துவர ஆளனுப்பி வைத்தான் அணங்கவளைக் கொட்டவொரு தேளனுப்பி வைத்தான் திருவில்லாப் புன்மகனே! கெட்டிமேளம் முழங்கிற்று மாவிலையும் தோரணமும் மன்றல் மணமென்று கூவிப் பறைசாற்றும் கொட்டுமே ளத்தொலியும் ஆடவர்கள் பெண்டிர் அணியணியாய்க் குழுமிவர வீடகமும் வீதிப் புறமும் விழாச்சிறக்க சந்தனமும் பன்னீரும் தக்க மணம்வழங்க வந்த உறவினர்கள் நண்பர் மகிழ்ந்திருக்க எங்குஞ் சிரிப்பொலியும் இன்பமிகு பேச்சொலியும் பொங்கும் உளமெல்லாம் போற்றுகின்ற வாழ்த்தொலியும் முக்கனியோ டப்பளமும் முட்டமுட்டப் பாயசமும் ஒக்கும் விருந்தும் உபசரிப்பும் அத்தனையும் காணுகின்ற காட்சி கவின்காட்சி இன்பவழி பேணுகின்ற காட்சி பெருங்காட்சி நற்காட்சி, கோதை யெழிற்கோலம் கொள்ளைகொள்ள உள்ளத்திற் போதைகொள்ள நூறுமுறை பூரித்துப் பார்த்துவிட்டான். மாது குனிந்தபடி மாதவனைப் பார்த்துவிட்டே ஏதுந் தெரியாள்போல் இன்பம் மறைத்துநின்ருள் அவள் அவனைப் பார்ப்பாள் அவன் அவளைப் பார்ப்பான் இவள்தன் னுடைமையன்ருே என்றும் அருகிருப்பாள் ஏணிப் பதட்டமென எண்ணுமல் நூறுமுறை தானுங் கவனித்துத் தன்னுள் மகிழ்ந்திருப்பான்.