உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாச்சியப்பன் இன்பத்தின் எல்லை இதுவென்று சொல்வதுபோல் அன்புப் பெரியோர் அடிகெட்டி மேளமெனபட்டுப் படுபடெனத் தட்டுக் கெடுகெடெனக் கெட்டுக் கிடகிடெனக் கெட்டிமே ளம்முழங்கும் அத்தருணத் தேயொருவன் அங்குவந்து மாப்பிள்ளை கைத்தலத்தில் ஒர்முடங்கல் வைத்துவிட்டுப் போய்விட்டான். கைமுடங்கல் தான்விரித்துக் கண்ணேட விட்டவனும் மெய்தளர்ந்து கீழே விழுந்துவிட்டான்; எல்லோரும் சூழ்ந்தார்; பரிதவித்தார்; தோழன் ஒருவனங்கு வீழ்ந்த முடங்கல் விரித்துப் படித்துநின்ருன். தேள் கொட்டிற்று அன்புள்ள தோழா, அருமை உயிர்நண்பா, என்பும் உயிருமென என்னே டுறவுடையாள் தன்னை மனைவியெனத் தானேற்றுக் கொள்ளுகின்ற இந்நாள் இனியநாள் என்னன்பு வாழ்த்துக்கள்! அன்புடையாள் என்றன் அகமுடையாள் இன்றெனினும் துன்படையேன் தோழன் துணையாக வாய்த்ததனல் ஆசைக் குரியனன்றன் அன்புமலர்க் கோதையினைப் பூசைக் குரியவளாய்ப் போற்றுகின்றேன் நெஞ்சகத்தில் நேசம் உனக்குமவள் நிச்சயமாய்க் காட்டிடுவாள் வேசையென்று தள்ளி விடாமல்நீ காப்பாற்று பூத்தமலர் ஒத்தாளைப் பொன்வண்டு போற்சேர்ந்து காத்திடுக தோழாஉன் கண்ணப்பன் வாழ்த்துகிறேன்.