உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாச்சியப்பன் ஆங்கிலத்தில் அன்புமொழி தான்பிறந்த நாட்டுத் தமிழ்மொழியில் பேசாமல் வான்வழியே வந்து குதித்திங்கு வந்தாற்போல் ஆண்டு கழிந்த அயல்நாட் டவன்மொழியில் வேண்டுமென்றே பேசித்தாம் மேன்மையுள்ளார் - போல் நடித்துத் தப்புச் சுதிசேர்த்துத் தாளந் தறிகெட்டுச் செப்பமில்லாப் பாப்பாடும் சீரற்ற பாடகன்போல் ஒப்பனையும் பொய்நடிப்பும் உல்லாச மாய்நினைத்துக் கற்பனையும் தீதாய்க் கழிகின்ற பேர்வழிகள் தன்மானங் கெட்டுத்தந் தாய்நாட்டு மானமுமே என்றும் பறிபோம் இழிநிலையைச் சேர்த்துவிட்டார். கூசும் படிக்கிங்கே கோதையரைத் தேடிவந்து பேசும் மொழியும் பிறமொழிகாண் என்றுரைத்துத் தோழிகளின் பக்கம் துணைதேடித் தான் நடந்தாள். கோழையவன் நெஞ்சங் குமுறிப் புறஞ்சென்ருன் இன்றுநீ என்னை இலட்சியந்தான் செய்யவில்லை என்ருே உனயொருநாள் எய்தா திருப்பேனே என்றுதன் நெஞ்சுக்குள் எண்ணமிட்டுக் கண்ணப்பன் நின்ற இடம்விட்டு நீங்கி நடந்துவிட்டான். சூடேற்றும் தோழர்கள் நாடாள வந்தோர் நடப்பறிய ஒற்ருடல் கூடா வழக்கன்று; கோதையரைப் பின்தொடர்ந்து மாணவர்கள் ஒற்ருடல் மன்னிக்கக் கூடியதோ! ஆணவத்தால் கண்ணப்பன் அன்றுகண்ட பெண்ணவளே