உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.15 என்றேனும் ஒருநாள் இவளுறவு கொள்ளாமல் சென்ருல்என் வாழ்வு சிறக்கா தென நினைத்தான். அன்றைக்கே அப்பொழுதே அந்நொடியே பாகுமொழி ஒன்றேனும் கேட்டுவர உள்ளந் துணிந்தான். அழகி - -- முகஞ் சுளித்தாள் இடுப்புக் குழாய்தன்னை ஏழுமுறை தட்டி மடிப்புக் கலையாத சட்டை சரிபார்த்துப் பையில் இருந்த பகட்டுமா தானெடுத்துக் கைவிரலால் தன்னிரண்டு கன்னத்தும் நெற்றியிலும் பூசித் துடைத்துவாய்ப் புன்னகையை மேற்கொண்டு மீசையே யில்லாத மேலுதட்டின் மேற்புறத்தைக் கையால் தடவிக் கதகதக்கும் நெஞ்சுடனே பைய நடக்கும் பனிக்குடத்தை யொத்தாளின் பக்கத்தே போய்நின்ருன்; பல்வரிசை தான்விரியக் கெக்கெக்கே என்று சிரித்தான்; திரும்பினள். அள்ளி விழுங்குபவன்போல் ஆவலொடு தான்பார்த்தான் கொள்ளி சுடுவதுபோல் கோபிக்கும் பார்வையுடன் கன்னி மயில் நடந்தாள்; கண்ணப்பன் தான்தொடர்ந்தான் பின்னும் குழைவாகப் பேச்சில் நயங்காட்டி இங்கென்ன தட்டெழுத்தா இல்லே சுருக்கெழுத்தா தங்கள் படிப்புத் தயவாய் உரைக்கவென்றே ஆங்கிலத்தில் கேட்டான்; அழகி முகஞ்சுளித்தாள். தேங்கும் வெறுப்பெல்லாம் சேர்த்துத் திரட்டிச் சுருக்கென்று தைக்கச் சுருக்கெழுத்தென் ருேதிக் கருக்கென்று தான் நடந்தாள் கட்டிக் கரும்பனையாள்!