உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழவைத்தான் கண்ணப்பன், கவின் நிலவைத் தேடி தோன்றும் முழுநிலவைத் துள்ளும் களிப்புடனே ஊன்றிக் கருவிழியால் உற்றுற்று நோக்குதல்போல் கண்ணப்பன் தன்விழியால் கண்டான்.அப் பெண்மயிலே உண்ணப் படைத்த அமுதென்றே உள்ளத்தில் எண்ணத் தலைப்பட்டான். என்ன அழகென்றே வண்ணக் கலைப்படத்தை வைத்த கண் வாங்காமல் கண்டு மனத்திரையில் கைவண்ணத் தைக்காட்டிக் கொண்டு வடித்தெழுதும் ஒவியனைப் போலிருந்தான். வானில் மிதந்துவரும் வண்ண நிலவைப்போல் தானும் மிதக்கின்ருள் தங்கம் மனக்கடலில் ஆளை விழுங்கும் அவளின் விழியிரண்டும் வாளைமீன் என்ரு நான் வர்ணிப்பேன்! சிந்தாமல் கோத்துவைத்த முத்துப்போல் கொள்ளைச் சிரிப்புடனே சேர்த்துவைத்த பல்வரிசை சிந்தையிலே மின்னலிடும்! ஊட்டமுள்ள அங்கங்கள் ஒவ்வொன்றும் செவ்வண்ணம் திட்டிவைத்த நற்சிலைபோல் செம்மாந்து தோற்றமிடும்! கண்ணில் பதிந்தாள் கருத்தில் பதிந்துவிட்டாள் எண்ணக் கருவறையில் எங்கும் நிறைந்துவிட்டாள்