பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 107 "வரலாகும்” எனக்கேட்ட சுந்த ரிக்கு மனமகிழும்! செவிகுளிரும்! உதடு கொஞ்சம் விரியும் எழிற் பல்மின்னும்! வாயில் நோக்கி விரையும்கால்! பின்வந்து தோழி தன்னை உரையடி நீ அவரெங்கே உள்ளா ரென்றே உளத்தினிலே நாணமுறக் கேட்டுப் பின்னர் "ஒரு காதம்-ஆலமரம் விரிக்கும் நீழல்” உளத்திலிந்தச் சொற்படியப் பறந்தாள் தேரில்! உலகிற்கோர் நன்மையினை எண்ணி எண்ணி உட்கார்ந்த புத்தர்நிலை தன்னை எய்தி தலையாக இந்நகரிற் செய்தற் கேற்ற தனித்தொண்டு பாதிந்த மக்க ளெல்லாம் நிலையான மகிழ்வெய்தப் புத்தர் பெம்மான் நிகழ்த்தியசொற் கோவையினைச் சொல்லி விட்டால் விலையேறு மா?விளக்க வேண்டு மாவென்(று) எண்ணுகின்ருன் இளைஞனவன் கண்ணே மூடி! வந்தாளச் சுந்தரியாள் வாழ்த்து ரைகள் வாய்நிறைய! வண்ணமலர் கைதி றைய! செந்தாம ரைபோலுஞ் சேவ டிக்கீழ்ச் சென்றமர்ந்து பாதத்தில் நீர்தெ ளித்துச் செந்தேனர் மலரிட்டுக் கைகள் கூப்பித் தேவேஉம் அடியாள்.உம் திருமுகத்தை வந்தேய டைந்தே னென் றுரைத்து நின்ருள். வடிவழகன் நினைவுலகி னின்றும் மீண்டான்! சின்னமலர்க் கண் திறந்தான் சேவ டிக்கீழ்ச் சிதறியபூப் பலகண்டான் சினத்தினலே "என்னம்மா செய்தீர்கள்? இயற்கை யன்ன என்மீது சினங்கொள்வாள். இப்படித்தான்