உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாச்சியப்பன் அன்னைமுகங் கிள்ளிவந்து சின்னப் பையன் அடிகளிலே போட்டுசினங் கிளப்ப லாமா? என்முகத்தைக் காணவந்தால் பாதந் தன்னில் எழில்மலரைப் போடுவதோ சொல்வீர்”என்ருன். திகைத்துநின்ற சுந்தரியாள் செப்பு கின்ருள் தேவேஉம் மேற்காதல் கொண்டு விட்டேன்! பகைபோலப் பேசுகின்றீர் பதற வேண்டாம். பாவையிடம் அன்புக்கண் திறப்பி ராயின் வகைப்பட்ட காமவிளை யாட்டுக் கண்டு ‘வாழ்க்கைபாழ்' என்னுமதச் சொல்லை மாற்றி மிகையான மகிழ்ச்சியிலே இரண்டு பேரும் மிதந்திடலாம்” என்ருள்;தன் செவிம றைத்தான்! "அன்னய்நீ சொல்லியதிற் பொருளே யில்லை ஆசையிற்ை கெட்டதிந்த உலக மென்று சொன்னனெம் புத்தர்பிரான் உணர்ந்த றிந்து: சொல்லியநின் பேச்சனத்தும் நஞ்சே யன்ருே? இன்னுக்கள் தரும்நினைவை இனிய கற்றி இனியபுத்தர் வழியொழுகி இருப்பை யாயின் உன்னற்பல் மாதருக்கும் நன்மை யுண்டாம் உடன் விடுவாய் தீஎண்ணம்’ என்று ரைத்தான். 'இளமையிலே நின்னைவந் தேமாற் றித்தான் இழுத்துப்போய்ப் புத்தமதம் தன்னில் விட்டார் வளமார்ந்த வாழ்வுதனைப் பாழென் றேதான் வரைந்துவிட்டார் கற்பனைகள் உன்னுள் ளத்தில்! வளமாரக் காதலித்த மாதொருத்தி யுடன்சேரும் இன்பத்தை இளமை நல்கும்! விழலாக இளமையினை வீழ்த்து கின்ருய்! இழந்தாற்பின் வாராதே யுணர்க” என்ருள்.