உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 119 'அன்புடையீர் மனத்திலெனக் கமைதி யில்லே ஆகையில்ை நானிருப்பதாலே யிந்த நன்மதத்தில் மாசுவந்து நேரு மென்று நான்கருது கின்றேனுற் போகின் றேன். நீர் என்னிடத்தில் காட்டுகின்ற அன்புக் கெல்லாம் என்னுளத்தில் இடமுண்டு மறவே னென்று சொன்னவன்தான் நடந்துவிட்டான். கதிர்ம றையச் சூழ்ந்தநிழல் போலமைதி சூழ்ந்த தங்கே. பூசாரி மன்னனைக் காணப் போதல் குதிரைக் கழுத்துப் பிடரியைப் போல் அந்தக் குருக்கள் குடுமி அசைந்திருக்க எதிரிச் சமயம் கழுவி லேறக்-காணும் எண்ணத்துடனே நடந்து சென்ருர். கம்பதை ஊன்றி அடியெடுத்து-அவர் கால்கள் தடுமாறும் போதினிலே வம்பதே வாழ்க்கையில் இன்பமெனக்-கொண்ட வஞ்சக மில்லாச் சிறுவரெல்லாம், 'மூன்றுகால் பூச்சியைப் பாருங்கடா!-அது முக்கி நடந்துமுன் னேறுமடா! ஊன்றிய கம்பைப் பிடுங்கிவிட்டால்-அது உடனே விழுந்துயிர் போக்குமடா!' என்று சொல்லிப்பின் தொடர்ந்து வந்தார்-குரு 'ஏ! போய் விடுங்கடா” என்றுரைத்தார் நின்றுதம் பற்களைக் காட்டி விட்டே-அங்கு நிற்காமல் ஒடிப்பின் மீண்டுவந்தே,