உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெறிதுடி குறையின்றி வாழக் குவலயத்தில் நல்ல நெறிசூடி நிற்றல் இனிது. கறையின்றி வாழக் கவலையற நல்ல நெறிசூடி நிற்றல் இனிது. துறைதோறும் இன்பம் துலங்கிடவே நல்ல நெறிகுடி நிற்றல் இனிது, ஆத்தி சூடி அருளிய ஒளவையைப் போற்றி இங்கொரு புதுநூல் செய்தேன் செந்தமிழ்ப் பாட்டி செய்த திருநூலுக்கு இந்த நூல் எவ்வாறு இணே யாகும்என அறியேன் ஆயினும் ஆவலே கொண்ட குறியாய் இயற்றிக் கொடுத்து விட்டேன் பழையன கழிந்து புதியன புகுந்து விளைவன அனைத்தும் வேறு வேருய் மாறினும் சட்டமும் நாட்டு வழக்கும் ஏறு மாருய் இருப்பினும் நெறிமுறை என்றும் மாறுவ தில்லை என்றே குன்றில் ஏறி நின்றுகூ றுவனே! அறமிது வென்றே ஒளவை கூறிய திறத்தினை மறுப்பார் தெரியா தவரே!