உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21i அன்னை அவளின் ஆத்தி சூடியைப் பின்னும் விளக்கப் பிறந்த நூலென இதனை அறிஞர் ஏற்றிடல் வேண்டும் புதுமை ஈதெனப் போற்றி இளையரும் நல்ல நெறியில் நாடொறும் பழகி வல்லவ ராகிச் செந்தமிழ் நாட்டை வையத் துயர்ந்த வழுவிலா நாடெனச் செய்யத் துணிக செழித்து வாழியவே! கற்றவ ரோடு காது குளிரப் பெற்றவர் தாமும் பேணி மகிழ்ந்து நல்ல தமிழில் நாச்சி யப்பன் சொல்லிய நன்னெறி சூடி விளங்கவே. அன்புநெறி நில் ஆக்கம் பெருக்கு இனியவை பேசு ஈயென வாழேல் உயர உழை ஊசல் மனங் கொளேல் எண்ணிய முடி ஏசிப் பேசேல் ஐய வினக் கேள் ஒன்றித் தொழில் செய் ஒடி நலங்கொள் 象 ஒளவெனக் குறுகேல் அஃறிணைக்கு இழியேல் கடல் கடந்துறவுகொள் வவ்வினம் போலிரேல் சட்டம் வகுத்து நில்

: