உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 217 6. தன்னுறுதி யில்லானத் தான்வெறுக்கு மிவ்வுலகம் தன்னுறுதி யில்லா தவன்வாழ-இந்நாளில் எச்சிறு செய்கையும் இல்லையே இல்லைகண்டீர் பிச்சைத் தொழிலிற் பிற. 7 பிச்சைத் தொழிலே பெருமை யுடைத்தென்பேன் இச்சைக் குரியதோர் இன்னுலகம்-உச்சிக்கு மேலுண்டென் ருேதி மிலேச்ச உளத்தால்தம் தோல் வளர்க்கும் தீய தொழிற்கு. 8 பசித்தார்க்குச் சோறிட்டுப் பார்க்கத்தம் உள்ளத் திசைவுடையார் எஞ்ஞான்றும் வாழ்க-புசிக்கத் திறனுண்டு போடென்பார்க் கீதல் உறிஞ்சும் வெறுமண்ணுக் கேநீர்வார்த் தற்று. 9 ஊரின் மடமை. ஒருவன் மடங்கட்ட வாரிப் பொருள் கொடுக்க வாழ்வதினும்-வாரிதியில் ஒடிப் போய் வீழ்ந்தங் குயிரை விடுதலையே நாடி மகிழ்தல் நலம். 10 அடிப்பான் ஒருவனுக் கஞ்சிப் பயந்து துடிப்பானின் வாழ்வெல்லாம் துன்பம்-பிடியும் செரியாது வாழ்ந்தென்ன செத்தென்ன மற்ருேர் வரிப்புலிக் கவ்வுணவை வை.