உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 5. முத்தந்தா நீ முத்தந்தா சொல்லச் சொல்லப் பயின்றுகொளும் சோலைக் கிளியே என்னுயிரே வெல்ல மழலை மொழிபேசி விரியும் திருவாய் முத்தந்தா செல்லத் தமிழே கனியுதடு சிவக்கச் சிவக்க முத்தந்தா செந்தேன் மலரே கனியுதடு சிவக்கச் சிவக்க முத்தந்தா. தவழ்ந்து தவழ்ந்து வந்துளத்தில் தழையும் அன்புத் தளிர்க்கொடியே அவிழ்ந்து அவிழ்ந்தே இதழ்விரியும் அழகு மலரே முத்தந்தா. பவழச் செவ்வாய்க் கனியுதடு பதித்தோர் இன்ப முத்தந்தா. பால்வழி யும்வாய்க் கனியுதடு பதித்தோர் இன்ப முத்தந்தா. எல்லை யில்லாப் பேரின்ப எழிலோ வியமே காவியமே தொல்லை மறந்து வாழ்வினிலே சுகத்தைக் காணச் செயப்பிறந்த முல்லைப் பூவே செங்கனிவாய் முத்தந் தாநீ முத்தந்தா முருகு விரியும் செங்கனிவாய் முத்தந் தாநீ முத்தந்தா.