பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நாச்சிம்ப் பன் 6. பொன்னே வைரப் பூவோவா கட்டிக் கரும்பே இங்கேவா கனியே தேனே இங்கேவா தட்டித் தடவித் தடுமாறித் தளர்ந்து விழுந்து விட்டாலும முட்டி மோதிக் கொண்டாலும் முயன்று மேலும் நடைபயிலும் சிட்டுக் குருவி இங்கேவா சின்னப் பூவே இங்கேவா. ஆடி ஆடித் தள்ளாடி, அடிவைத் தடிவைத் தென்மடியை நாடி நாடி முன்னேறி நடக்கும் மாடப் புருவேவா கூடிக் கூடி இருக்கவே கொஞ்சிக் கொஞ்சிப் பேசவே பாடிப் பாடி இங்கேவா பச்சைக் கிளியே இங்கேவா. தங்கக் கிண்ணச் சோறு நான் தருவேன் கண்ணே இங்கேவா பொங்கிச் சிறுசோ ருக்கவே புதிய சிட்டி தருவேன்.வா. அங்கும் இங்கும் செல்லாதே அன்பே அழகே இங்கேவா, பொங்கும் அன்பில் திளைக்கவே. பொன்னே வைரப் பூவேவா,