பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 231 7. வான நிலவே வாராயே யாரும் இல்லா வானத்தே. அலையும் நிலவே ஓடிவா ஊரும் உன்னைத் துணையாக ஒன்று சேர்த்து விளையாடச் சீரும் சிறப்பு மாய்வளர்ந்த செல்லக் கண்ணும் அழைத்ததே வாராய் வாராய் கீழிறங்கி வான நிலவே வாராயே.. அஞ்சி யஞ்சிப் பகலெல்லாம் யாங்கோ நீபோய் ஒளிகின்ருய் அஞ்ச வேண்டாம் என்செல்வம் அருகில் நீவந் திருந்தாலே கொஞ்சிக் கொஞ்சி விளையாடிக் கொள்ளே யின்பம் பெற்றிடலாம் மஞ்சு வானம் விட்டிறங்கி . வாராய் நிலவே வாராயே! தேய்ந்து தேய்ந்து மறைகின்ற சிறிய நிலவே வாராய்நீ பாய்ந்து வந்தென் கண்மணியின் பக்கம் நீயும் இருந்தாலே தேய்ந்து மறையா திருப்பாயே தினமும் வளர்ந்து சிறப்பாயே பாய்ந்து வாராய் கீழிறங்கி வாராய் நிலவே வாராயே!