பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நாச்சியப்பன் 8. ஆடாய் அம்மானை முத்து முத்தாய்க் காய்பொறுக்கி முற்றஞ் சேர்ந்து பெண்களெலாம் ஒத்தம் மனையே ஆடுகின்ருர் உயிரோ வியமே நீயும்போ எற்றுங் காயின் விசையோடே இசையும் ஒத்து வருமாறே நற்றென் பாங்கு பாடிநீ நல்லாய் ஆடாய் அம்மானே. கையின் சுழற்சி வேகத்தில் காய்கள் பறந்து பறந்தோட உய்யென் றெழுந்த காற்றினிலே சுழலும் பூவின் வண்டேபோல் மெய்யாய் அந்தக் காய்களின்பின் விழிகள் தொடர்ந்து தொடர்ந்தோட மையல் மகளே இசைபாடி மகிழ்ந்தே ஆடாய் அம்மானை. ஊறும் தேனின் திருவாயால் உருக்கும் தமிழில் இசைபாடி கூறு போட்ட காய்களையே குதித்தெ ழும்பச் செய்வாயே. ஏறும் காய்கள் தரைவந்தே இறங்கா வண்ணம் பிடித்தெற்றித் தேறும் வெற்றி கண்டேஎன் - செல்வி ஆடாய் அம்மானை.