பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நாச்சியப்டன் 10. ஊசல் ஆட வாராயே செடியும் கொடியும் பூவெல்லாம் தென்றல் காற்றில் மகிழ்ந்தாடும் அடியின் றேனே வண்டெல்லாம் அருந்தி அருந்திப் பறந்தாடும் இடியும் முகிலும் கண்டுமயில் இன்பத் தோகை விரித்தாடும் ஒடியும் இடையாய் சோலையிலே ஊச லாட வாராயே. கோலப் புருக்கள் வட்டமிடும் குயில்கள் பாடிக் குதுகலிக்கும் சோலைக் கிளிகள் பழமுழுதும் சுவைத்துப் பருப்பைத் தின்றிருக்கும் சேலின் விழியே கருங்குழலும் தென்றல் காற்றில் அசைந்தாட காலைத் தரையில் உதைத்துாசல் கண்ணே ஆட வாராயே. தோயும் இன்பம் வாழ்வினிலே தோன்றித் தோன்றி மாறுதல்போல் நாயும், ஊசல் முன் பின்னுய்ப் பறந்து சென்று மீண்டிடவே சாயும் கதிரோன் உடலெங்கும் தங்க வண்ணம் பூசிடவே வாயும் இன்பப் பண்பாட வாராய் ஆட வாராயே!