பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - நினைவு அலைகள் பல தரப்பினரும் தரும் ஆதரவைப் பொது நலன்ாக மாற்றுங்கள்” என்பது முதல்வரின் தனியான விழைவு. அவ் வாணையை நிறைவேற்றவே, பதவியில் இருந்தேன். மனம், மொழி, மெய்கள்ை ஒருமுகப்படுத்திச் செயல்பட்டேன் பெருந்தலைவருக்குக் கல்வி வள்ளல்" என்னும் புகழாரம் தொடுக்க, அண்லாகப் பாடுபட்டேன். நான், பதவியில் இருந்த காலமெல்லாம் நிகழ்சசகளுககோ, வரவேற்புகளுக்கோ குறைவில்லை. அவற்றை யெல்லாம் விரிவ்ாகச் சொல்லிக்கொண்டே போக விரும்பவில்லை. பகீரதனின் பாராட்டு - ஒரு பாராட்டு நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மேற்செல்லுகிறேன். .* so ■ 副 -■. சென்னை மாணவர் மன்றம், பொதுக்கல்வி இயக்குநராகிய னக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்தது. - - ஒரு நாள் மாலை, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை, டாக்டர் குருசாமி முதலியார் டி. டி. வி. உயர்நிலைப் பள்ளியில் 'நடந்த அவ் விழாவிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை என். ச்ோமசுந்தரம் அவர்கள் தலைமை ஏற்று என்னைப் பாராட்டி வாழ்த்தினார்கள். - . . . அப்போது 'கல்கி' இதழில் துணை ஆசிரியராகவிளங்கிய எனது அருமை நண்பர், திரு. பகீரதன் உரையாற்றியவர்களில் ஒருவர். அவர், தமது உரையில், - - i. 'துள்ளி வருகுது வேல் சுற்றி நில்லாதே பகையே! என்னும் பாரதியின் பாடல் வரிகளை முழங்கி, அவையோரைக் கவர்ந்தார். - "கல்வி வேல் புறப்பட்டுவிட்டது. இனி, தமிழ் மக்களின் அறியாமை இருள் தொலையுது” என்று பகீரதன் ஆரூடம் கூறினார். அது இன்னும் என்காதுகளில் ஒலித்தபடியே இருக்கிறது. அன்று திரு பகீரதனோடு ஏற்பட்ட பழக்கம், நட்பாக அரும்பி வாழ்நாள் அன்பாகக் கனிந்து உள்ளது. . டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/114&oldid=787899" இலிருந்து மீள்விக்கப்பட்டது