உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகச் சீர்கேடு 121 -- அதாவது மேலே இருப்பவர்களும் நனைந்து சுமக்க வேண்டியிருந்தது. பெரிய அலுவலர்கள் மக்களுக்குச் சேவை செய்ய எண்ணி இருந்தால், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரக் குவியலை ஆய்ந்து பார்த்து, தேவையான அளவு பரவலாக்கி இருப்பார்கள். அத்தகையோர் இல்லை; மேசை நாற்காலி அளவு நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்பதே அவர்களது குறிக்கோள். எனவே, மக்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிர்வாகச் சீரமைப்புக் குழுக்கள் சிற்சில போது நியமிக்கப்பட்டது உண்மை. பலன்? மலையைக் கல்லி, எலியைப் பிடித்த கதிதான். மிக மோசமான பாதிப்பு ஒன்று, விரைவில் என் கவனத்திற்கு வருகிறது. சத்திரத்தில் உயர்நிலைப் பள்ளி அண்ணாமலை பல்கலைக் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்திற்குச் சென்று வருவேன். முதன்முறை சென்றபோதே, சிதம்பரம் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியைக் காண நேர்ந்தது. அது ஒரு பழைய, சிறிய, சத்திரத்தில் நடந்து வந்தது, சத்திரத்தின் அறைகள் அத்தனையும் சிறியதாக இருந்தன. ஒன்றிலும் நான்கு பெஞ்சுகள் போட முடியாது. தரையில் உட்கார்ந்தால் பதினைந்து பேர்கள் உட்காரலாம். மாணவிகள் அப்படியே தரையில் அமர்ந்து கற்றார்கள். இடமின்மையால் எந்த வகுப்பிலும் பதினைந்து மாணவிகளுக்கு மேல் சேர்க்கவில்லை. உயர்நிலைப் பள்ளியில் இடந்தேடி அலைந்த பெண்களோ பலராவர். பெயரளவில் முழு உயர் பள்ளி, ஆறு வகுப்புகளுக்குமாக தொண்ணுாறுபேர். அதற்கு மொத்த ஆசிரியைகள் பத்துப் பேர்கள்; தலைமையாசிரியை தனியாக வேதனையூட்டும் பாதிக் கிணறு தாண்டும் - இவ்வேற்பாடு எவ்வளவு காலமாக ஒன்பது ஆண்டுகளாக நீடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/160&oldid=787945" இலிருந்து மீள்விக்கப்பட்டது