உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்விப் பட்டறை __ - 125 நான் எதிர்பார்த்தபடி, அப் பட்டறை நன்றாகச் செயல்பட்டது. காலத்தை ஒட்டுவதற்குப் பதில், ஆர்வத்தோடு பணியில் ஈடுபட்டது. 42 வெளியீடுகள் தேறின. உழைப்பு பயன் கொடுத்தது. விளைவு எவ்வளவு? அளவைப் பற்றி ஏட்டுப் பிரதிகளை மடல்கள், சுவடிகள், நூல்கள் என்று வகைப்படுத்தினார்கள். மொத்தத்தில் நூற்று அறுபத்து மூன்று உருப்படிகள் உருவாயின. எண்ணிக்கையும் படைப்புகளின் தரமும் எல்லோருக்கும் பெருமையூட்டுவதாக அமைந்தன. நிறைவு விழாவின்போது, பட்டறையில் உருவானவற்றைப் பொது மக்கள் பார்வைக்காகக் காட்சியில் வைத்திருந்தனர். அந்தக் கண்காட்சியைப் பொறுமையாகச் சுற்றிப் பார்த்த கல்வி அமைச்சர், சி. சுப்பிரமணியம் கையேட்டுப் பிரதிகளைப் பார்த்துப் பூரித்தார். அவற்றில் சிலவற்றைப் பொறுக்கி அச்சிட்டு வெளியிடும்படி அருகில் நின்றிருந்த என்னிடம் ஆணையிட்டார். பட்டறைத் திட்டத்தில் உருவாகும் நூல்களை அச்சிட்டு வெளியிடும் செலவுக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அத் திட்டத்தை ஏற்கெனவே, சென்னை மாநில அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதால், அமைச்சரின் ஆணையை நானே விரைந்து, செயல்படுத்த முடிந்தது. பீளைமேடு பட்டறையில் உருவாக்கப்பட்ட அத்தனை பிரதிகளையும் பாதுகாப்பாக என்னிடம் ஒப்படைத்தார்கள். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் நாள்தோறும் சில பிரதிகளை எடுத்துக் கவனமாகப் படித்தேன். பல கோணங்களிலிருந்தும் என் மனக்கண்ணால் பார்த்தேன். எண்பத்தெட்டு பிரதிகளைப் பொறுக்கிக் கொண்டேன். மீண்டும் படித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/164&oldid=787949" இலிருந்து மீள்விக்கப்பட்டது