உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்விப் பட்டறை 127 "குழந்தைகளுக்கே புரியும்போது, வயது வந்தோருக்குப் புரிவது எளிது. - "நீங்கள் நடத்திய பட்டறையால் நல்லது நிறையக் கிடைத்திருக்கிறது” என்று பாராட்டினார். ரூபாய் இரண்டாயிரம் லாபம் அத் தொகுப்பில் எத்தனை படிகள் வெளியிட்டோம்? ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் படிகள் வெளியிட்டோம். எந்த நூலுக்கும் கால் ரூபாய்க்குமேல் விலை வைக்கவில்லை. மொத்தத் தொகுப்பும் பத்து ரூபாய்களுக்குள் அடங்கிவிட்டன. அப்போது, முதியோர் எழுத்தறிவு மையங்கள் தமிழ்நாட்டில் இல்லை. அப்படியிருக்க எப்படி விற்றோம்? எத்தனை திங்கள் விற்றோம்? தொடக்கப் பள்ளிகள் வாங்கிக் கொண்டன. இரு திங்களில் அத்தனையும் விற்றுவிட்டன. இரண்டாயிரம் ரூபாய்கள்வரை இலாபம் கிடைத்தது. சில ஆயிரம் படிகளுக்கு மேலும் ஆணை வந்திருந்தது. இரண்டாம் பதிப்பிற்கான ஆணை வரவே இல்லை முதியோர் கல்வி நூல் தொகுப்பின் இரண்டாம் பதிப்பை விரைவில் வெளியிடலாம் என்று தோன்றிற்று. தேவையும் இருந்தது. இந்திய அரசின் பணம் செலவாகிவிட்டதால், சென்னை அரசிடம் கையேந்த நேரிட்டது. இரண்டாம் பதிப்பிற்கான திட்டத்தைத் தீட்டி அரசுக்கு அனுப்பினேன். 'பழைய விலையிலேயே விற்க முடியும், ஈராயிரம் ரூபாய் ஆதாயம் பெறமுடியும்’ என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அரசுக்கு எழுதினேன். சிலமுறை நினைவுபடுத்தினேன். அமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் எழுதினேன். அவரிடமும் நினைவுபடுத்தினேன். எதுவும் பலிக்கவில்லை; அரசு ஆணை வரவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/166&oldid=787951" இலிருந்து மீள்விக்கப்பட்டது