பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - - நினைவு அலைகள் 'இவ்வளவுதான். நம் பொதுமக்கள் கொடுத்து வைத்தது' என்று வெளியில்கூடச் சொல்லிக் கொள்ள முடியாமல்' ஊமையானேன். பொது மக்களுக்குப் பணி செய்ய அரசு! அதற்கான விரிந்த உயர்ந்த கட்டுமானம்!- கை நிறைய ஊதியம் பெறும் அலுவலர்கள்! அரசின் பணம் செலவாகாத போதும், தேவையான திட்டத்திற்கு ஆணை கொடுக்க முடியாத ஆட்சியமைப்பு! 'இதற்கா விடுதலை பெற்றோம்? என்று மனம் புழுங்கினேன். பல தலைமுறைகளாக, பொதுமக்களை விட்டு நெடுந்தொலைவில் வாழ்ந்தவ்ர்கள் - வாழ்கிறவர்கள் - பெரிய அலுவலர்களாக இருப்பதால், செய்ய வேண்டியவை எவை என்று. புரியவில்லை 'இருபது முப்பது ஆண்டுகளில், எல்லாப் பெரும் அலுவலர் பதவிகளும் சாதாரண மக்களிடம் வந்துவிடும். அப்புறம் மக்கள் நலன் பெற வேண்டியவை முன்னுரிமைபெறும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்!” என் கண்ணோட்டத்தில் முற்பாதி பலித்துவிட்டது. மேலோரிடம் இருந்ததற்கு மாறாக, மக்களிடமே பெரும்பாலான பெரிய அலுவல்கள் சிக்கியுள்ளன. மக்கள் நலன் பேணப்படுகிறதா? ஆம் என்று சொல்ல முடியவில்லை! தெருவே செல்வோருக்குப் புரியும் நியாயம்கூட, மூத்த அலுவலர்களுக்கு எட்டமாட்டேனென்கிறதே! - 'அடுத்த பதவி இல்லையா? என்ன பெயரில் உருவாக்கிக் கொள்ளலாம்? அரசியல் கட்சிக்காரர்களாக நடிப்பதா? சாதி வலிமையைச் சொல்லிக் கேட்பதா? - இவ் விரண்டிற்கும் வேண்டிய துணிச்சல் இல்லாவிட்டால், முதற்படி - தட்டு எழுத்தருக்கும் அஞ்சி - மிரட்டுகிற அரசியல்வாதிக்கு எல்லாம் நடுங்கி - வழிபாட்டில் காலத்தை ஒட்டுவதைத் தவிர வேறென்ன நடக்கிறது?” விவேகானந்தர் ஊட்டிய வெறி “நீர், மகான்கள் மகரிஷிகள் வழியே வந்தவர் என்பது விளங்குகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/167&oldid=787952" இலிருந்து மீள்விக்கப்பட்டது