பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ørs:T-min Brüßgine:IGĖ ŠILLI : * bož $--šeng. --Ganës"Garsi 129 "உன்னோடு பிறந்தவர்களில் கோடிக்கணக்கானவர்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, நாயினும் கடையர்களாக அலைகிறார்கள் என்பதை உணருகிறாயா? 'அவ்வுணர்வு உன் துாக்கத்தைக் கலைக்கிறதா? அத்தகையோரைப் பற்றிய சிந்தனை உன் பல நாள் துரக்கத்தைக் கெடுக்கிறதா? “அதன் பயனாக, நீ வெறியனாகிவிட்டாயா? அப்படி வெறியனாகும்போதுதான், நீ மனிதனாவதற்கு முதல் அடி எடுத்து வைக்கிறாய் என்று உணர்வாய்.” இப்படிச் சுவாமி விவேகானந்தர் முழங்கியதைப் படித்துவிட்ட குற்றம் - அது என் நெஞ்சில் பதிந்துவிட்ட விளைவு - எனக்குத் தொண்டு வெறியை ஏற்றிவிட்டது. அது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தணிய மறுக்கிறது, நான் என் செய்ய? 17. இரண்டாம் அய்ந்தாண்டுத் திட்டம்: கல்வித் திட்டத்தை உருவாக்கினேன் திட்டமிடுதலின் அடிப்படை திட்டமிட்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவது என்று இந்திய நாடு முடிவு எடுத்தது. இம் முறை சமதர்ம நாடுகளின் போக்கு மட்டுமன்று பிரான்ஸ் போன்ற சில தனியுடைமை நாடுகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. நாட்டின் பல்துறைகளும் வளர்வதற்குத் துணையாயிருப்பது திட்டமிடுதல். அப்படித் திட்டமிடும்போது, ஒரு அடிப்படையை ம்றத்தல் ஆகாது. . . . ஒவ்வொரு அய்ந்தாண்டுத் திட்ட காலத்திலும் எந்தெந்தத் துறையில் எவ்வெப்பகுதி எவ்வளவுக்கு வளர்க்கப்பட வேண்டும் என்னும் வரம்புகளை முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/168&oldid=787953" இலிருந்து மீள்விக்கப்பட்டது