உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நினைவு அலைகள் அம் முடிவு நிர்வாக மட்டத்தில் இருந்தால், அதற்கு நாடு தழுவிய ஆதரவு கிடைக்காது. தொடக்கத்திலேயே ஆட்சியின் உயர்மட்டத்தில் பெரும் முடிவுகளை எடுத்து அறிவித்தால், பொதுமக்கள் அவை பற்றிச் சிங்கிக்க முடியும். சிலவேளை அரிய மாற்று ஆலோசனைகள் கிடைத்தால், அவற்றையும் கவனத்தில்கொண்டு திட்டத்திற்கு இறுதி உருவம் கொடுக்க இயலும், நம் நாட்டின் முதல் அய்ந்தாண்டுத் திட்டம் ஒரு வகையில், அவசரச் சமையலுக்கு ஒப்பாகும். அதற்காக, வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை! திட்டமிடும் முறை அப்போது, நமக்குப் புதிது ஆகும். பல திட்டங்களுக்குப் பிறகும், பழைய பாணியிலேயே ஒவ்வொரு பிரிவு பற்றியும் சில வல்லுநர்கள் கூடிப் பேசி மதிப்பீடுகள் தருவதும், அவற்றைப் பொருத்தி, முழுமையாக - பல்துறை திட்டத்தை உயர்மட்ட அலுவலர்கள் உருவாக்குவதும், அதை மைய அரசின் பேரால், முதலமைச்சர்கள் முன் வைத்து, ஒப்புதல் பெறுதல் வெறும் சடங்காகவே தொடரலாமா? பெரியவர்கள் சிந்திக்க வேண்டியது பற்றி, நீங்களும் நானும் கவலைப்பட்டுப் பயன் என்ன? அது கிடக்கட்டும். நான் செயல்பட்ட முறை நான் எப்படிச் செயல்பட்டேன் என்பதைச் சொல்லுகிறேன். நான் பொதுக்கல்வி இயக்குநரான சில திங்களில் இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டும் பணியைத் தொடங்க வேண்டியிருந்தது. 'திட்டம் தீட்டும் நிலையிலேயே பாட்டாளிகளை, அதைச் செயல்படுத்த வேண்டியவர்களைக் கலந்து பேசி, குறியீடுகளை வகுப்பதால் சோவியத் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன என்று கேள்விப்பட்டிருந்தேன். எனவே, ஆங்காங்கே ஆய்வாளர்களையும், ஆசிரியத் தலைவர்களையும் கலந்து ஆலோசித்தேன். நம் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/169&oldid=787954" இலிருந்து மீள்விக்கப்பட்டது